வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் என்பது ‘அரசியல் இனப்படுகொலையே!’ பரகலா பிரபாகர் குற்றச்சாட்டு

- Advertisement -

திருவனந்தபுரம், நவ.19 “வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்.அய்.ஆர்.) என்பது இரத்தம் சிந்தாத அரசியல் இனப்படுகொலை” என்று பொருளாதார வல்லுநரும் அரசி யல் விமர்சகருமான பரகலா பிரபாகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில்,
‘எஸ்.அய்.ஆர்., மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான கேரளம்’ என்ற அமைப்பின் சார்பில் நேற்று (18.11.2026) நடைபெற்ற ஒருநாள் பயிலரங்கில் உரையாற்றிய அவர், ‘‘எஸ்.அய்.ஆர். நடவடிக்கையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் வலியு றுத்தினார். மேலும் எஸ்.அய்.ஆர். நட வடிக்கைக்குப் பிறகு நடத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும்’’ என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

“இந்தியாவில் இதுவரை எஸ்.அய்.ஆர். என்ற நடைமுறை ஒருபோதும் இருந்ததில்லை. எஸ்.அய்.ஆர். என்பது ஒருபோதும் தேர்தல் தொடர்பான ஒரு வழக்கமான நடவடிக்கையாக இருந்ததில்லை. கடந்த காலங்களில் பல்வேறு அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்திலும் எஸ்.அய்.ஆர். நடை முறைப்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யான தகவல். ஒருவரின் குடியுரிமையையே பறிப்பதுதான் எஸ்.அய்.ஆர். இது இரத்தம் சிந்தாத அரசியல் இனப்படு கொலையைத் தவிர வேறொன்றுமல்ல” என்று பரகலா பிரபாகர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *