
Google One AI Pro/Ultra அல்லது ChatGPT Plus போன்ற சேவைகளை வைத்திருப்பவர்கள் IRCTCயில் Train Ticket பதிவு செய்யலாம் என்பதை அறிவீர்களா?
ரயில் டிக்கெட் மட்டுமல்ல, சினிமா டிக்கெட் பதிவு செய்வது முதற்கொண்டு மீண்டும் மீண்டும் உங்கள் வலை உலாவியில் செய்யக்கூடிய அலுப்பூட்டும் வேலைகளைச் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம். இதனை browser agent, computer use என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.
இந்த வசதியை நீங்கள்,
- மடிக்கணினி / மேசைக் கணினியில் மட்டுமே பயன்படுத்த முடியும் செல்பேசியில் வேலை செய்யாது.
- ChatGPT Plus வைத்திருப்பவர்கள் ChatGPT Desktop app பயன்படுத்திச் செய்வது உகந்தது.
- Gemini வலைத்தளத்தில் இந்த வசதி வேலை செய்யாது. Laptopஇல் உள்ள Google Chrome browserஇல் Alt+G அழுத்தி sidebarஇல் Gemini தோன்றச் செய்யுங்கள். அல்லது, Ask Gemini என்று வலது மூலையில் காட்டும். அதனை அழுத்தியும் Sidebarஇல் Gemini இயக்கலாம். அந்த Sidebarஇல் கீழ்க்காணும் prompt தந்தால் வேலை செய்யும்.
இப்போதைக்கு அது நம்மை விட மெதுவாகத் தான் வேலை பார்க்கிறது. எனவே, Tatkal அவரசத்திற்கு உதவுமா தெரியாது. ஆனால், சில நாட்கள் முன் கூட்டியே திட்டமிட்டுச் செய்யும் முன்பதிவுகளை நிச்சயம் செய்ய முடியும். எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்குச் செல்கிறோம், எந்த நேரம் கிளம்ப வேண்டும், பயணிகளின் பெயர், Sleeper, 3rd AC போன்று நாம் எதிர்பார்க்கும் வசதிகளை முன்கூட்டியே சொல்லிவிட்டால், அதுவே அந்த விவரங்களைத் தேடி நிரப்பி, பணம் கட்டும் இடத்திற்கு (Payment) அழைத்துச் சென்றுவிடும்.
ஒரு முறை இதைச் செய்து சரி பார்த்து விட்டு, அடுத்தடுத்த முறை ஒரே வரியில் கட்டளையைக் கொடுத்து விட்டு நாம் மற்ற வேலைகளைப் பார்க்கலாம். அடிக்கடி பயணம் செல்பவர்கள், அவ்வளவாக IRCTC வலைத்தளம் அறிமுகமில்லாதவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு முறை இந்த Promptஅய்ச் செயற்படுத்திப்பார்த்து விட்டு, இதனை ஒரு Skill ஆகச் சேமித்துக் கொள்ளலாம். Skill என்றால் என்ன, அதை எப்படிச் சேமிப்பது என்று குழம்பாதீர்கள். உங்கள் ஏஅய் கருவியிடம் இதை ஒரு Skill ஆகச் சேமித்துக் கொள்ள என்றால் அதுவே செய்துவிடும். அடுத்த முறை பதிவு செய்யும் போது, அந்த Skill பெயரைக் குறிப்பிட்டு, உங்கள் பயண விவரங்களை மட்டும் குறிப்பிட்டு சீட்டு பதிவு செய் என்றால் கில்லி மாதிரி பதிவு செய்யும். Prompt கீழே. முழுதும் படித்துப் பார்த்து உங்கள் தேவைக்கு பெயர், பயண வகுப்பு உள்ளிட்ட விவரங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
‘Prompt’-அய் இந்த ‘QR CODE’-அய் ஸ்கேன் செய்து பெறுங்கள்.
செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் உச்சத்தை அளவிட உலக அளவில் என்னென்னவோ வரையறைகளைச் சொல்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்குமா, யாரும் தீர்வு காண முடியாத கணிதச் சிக்கல்களைத் தீர்க்குமா என்றெல்லாம் கேட்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, IRCTC ticket பதிவு செய்யும் அளவுக்கு ‘ஏஅய்’ வந்திருப்பதே ஒரு சாதனை தான். என்ன நாஞ் சொல்றது?!

