
மலேசியாவில் நடை பெறவுள்ள தமிழ் வர லாற்று ஆய்வு மாநாட்டில் பங்கேற்க, கீழடி அக ழாய்வை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத் தக்கதாகும்.
தமிழ்நாட்டின் வரலாற்றின் முக்கியமான கால கட்டத்தை வெளிக் கொண்டுவந்த காரணத்தாலேயே தொடர்ந்து அவர் அலைக்கழிக்கப்படுவதும், கீழடி ஆய்வு அறிக்கையைத் திருத்தித் தருமாறு நிர்ப்பந்திக்கப்படு வதும், அவமதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது.
ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசு, தான் விரும்பும் வகையில் வரலாற்றை மாற்றி எழுத ஆட்களைத் தேடுகிறதே தவிர, முறையான ஆய்வுகளை மேற்கொள்ள விரும்பவில்லை. எல்லோரிடமும் உறுதிமொழிப் பத்திரம் கேட்கிறதா ஒன்றிய அரசு? அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு மட்டும் அந்த நிர்ப்பந்தம் ஏன்?
வாய் வார்த்தைகளில் தமிழைப் புகழ்வதாகக் காட்டுவதில் பயனில்லை. இதில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. உண்மை முகம் வெளிப்பட்டுவிடுகிறது.
தமிழர் வரலாற்றுக்கு எதிரான இந்தப் போக்கை நிறுத்திக் கொண்டு, உரிய விதிகளின் படி அவருக்கு, தமிழ் வரலாற்று ஆய்வு மாநாட்டில் பங்கேற்கத் தடையில்லா சான்றை ஒன்றிய அரசு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்ைன
18.11.2026
