டெக்கான் கிரானிக்கள், சென்னை:
* எஸ்.அய்.ஆர். விவகாரம்: ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் மனுக்கள் மீது டிசம்பர் 9இல் உச்சநீதிமன்றம் விசாரணை! வாக்காளர் பட்டியலில் பெருமளவில் பெயர்கள் நீக்கம், முறைகேடுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து ராகுல் காந்தி உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணித் தலைவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் 48 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் உயர் அதிகாரிகள் பிரமாணப் பத்திரத்துடன் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கள், அய்தராபாத்:
* அமெரிக்க நீதிமன்றம் அதிரடி: வெளிநாட்டு மாணவர்களின் விசா காலத்திற்கு 4 ஆண்டு வரம்பு விதிக்கும் டிரம்ப் அரசின் உத்தரவு ரத்து! F-1 மற்றும் J-1 விசா மாணவர்களின் அமெரிக்கத் தங்கும் காலத்தை நான்கு ஆண்டுகளாக கட்டுப்படுத்தும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் விதியை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்தது. தகுந்த காரணங்களையும் விளைவுகளையும் மதிப்பிடாமல் விதிகளை மாற்றியது சட்ட நடைமுறைக்கு எதிரானது என நீதிபதி தீர்ப்பளித்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆர்.எஸ்.எஸு-ம் நாசிசமும் ஒன்றே – பாசிசத்துடன் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு ஒப்பீடு! நல்கொண்டா விவசாயிகள் மாநாட்டில் கடும் விமர்சனம்! ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் அரசியல், சித்தாந்தச் செல்வாக்கு ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் அரசியலமைப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் அசோக் தவாலே குற்றச்சாட்டு.
தி இந்து:
* குஜராத் கலவர வழக்கில் மோடியின் பங்கு குறித்த விசாரணையை காங்கிரஸ் தலைவர்களே தடுத்தனர் – வீரப்பமொய்லி குற்றச்சாட்டு! குஜராத் கலவர வழக்கில் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி மீதான விசாரணை தொடர்ந்திருந்தால் அவரும் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்; ஆனால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சில தலைவர்கள் விசாரணையைத் தடுத்ததாக வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
* கார்த்திகை தீபம் விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை! திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்க கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
* மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இணையதளத்தில் 287 மதப் பிரிவுகளா? புதிய சர்ச்சை! மதப் பிரிவுகளுக்கான பட்டியலில் 287 விருப்பங்கள் இடம் பெற்றுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜாதி விவரங்களுக்கும் ஏன் இத்தகைய விரிவான தேர்வுப் பட்டியல் வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளன.
தி டெலிகிராப்:
* “பத்திரிகைச் சுதந்திரத்தை நீதித்துறை கொள்கை அளவில் ஆதரிக்கிறது; நடைமுறையில் தோல்வியடைகிறது” – கபில் சிபல்! பத்திரிகையாளர்கள் கைது, மிரட்டல் மற்றும் செய்திகளுக்காக குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நிலையில், அரசியலமைப்பு வழங்கும் பாதுகாப்புகள் நடைமுறையில் பயனளிக்கின்றனவா என மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.
* 2002 குஜராத் பாலியல் வன்கொடுமை வழக்கு: இரு குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதால் பில்கிஸ் பானு குடும்பத்துடன் குஜராத்தை விட்டு வெளியேறியதாக உறவினர் தெரிவித்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “சமாஜ்வாதி கட்சியினரின் வாக்குகள் நீக்கப்படும்; போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர்” – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு! 2027 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-அய் தவறாக பயன்படுத்துவதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார். எதிர்க் கட்சியினரின் வாக்குகளும் நீக்கப்படலாம் என எச்சரித்தார்.
– குடந்தை கருணா
