கொல்கத்தா, நவ.16- மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் புர்ராபஜார் பகுதியில் உள்ள குருத்வாரா பாரா சிக் சங்கத்திற்கு அம்மாநில முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி சென்றார். அங்கு சீக்கிய சமூகத்தினர் நடத்திய பேரணியிலும் அவர் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:-
சிறுபான்மையினர் என்றால் குறிப்பிட்ட முஸ்லிம் சமூகத்தினரை மட்டும் குறிக்காது. சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள் ஆகியோரும் மதச் சிறுபான்மையினர்தான். ஆனால், முந்தைய மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அரசு முஸ்லிம்களை மட்டுமே சிறுபான்மையினராக கருதிச் செயல்பட்டது. தேர்தல்களில் முஸ்லிம் சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதற்காக அந்த சமூகத்தினருக்கு ஆதரவான அரசியலில் ஈடுபட்டது. முஸ்லிம்கள் மட்டும் தான் சிறுபான்மையினரா? என்பதற்கு அவர் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குற்றச் சாட்டி பேசினார்.
