முழங்கால் மூட்டுத் தேய்மானம்: சிகிச்சை முறைகள்

4 Min Read
- Advertisement -

மருத்துவர் ப.திருநாவுக்கரசு
நிலைய இயக்குநர், அரசு புனர்வாழ்வு மருத்துவமனை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை

முழங்கால் மூட்டுத் தேய்மானம் (OA Knee) என்பது மூட்டிலுள்ள குருத்தெலும்பு படிப்படியாகச் சிதைவடைவதால் ஏற்படும் பொதுவான நோயாகும். இந்தியாவில் 40 வயதிற்கு மேற்பட்ட 20% முதல் 40% சதவீதம் மக்களுக்கு மூட்டுத் தேய்மானம் உள்ளது.

இதனால் வலி, மூட்டு இறுக்கம், நடப்பதில் சிரமம் மற்றும் அன்றாடச் செயல்பாடுகளில் குறைபாடு ஏற்படலாம். நோய் பாதிக்கப்பட்டவரின் அறிகுறிகள், உடல் பரிசோதனை, X-ray தரம் (Kellgren–Lawrence grading) மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பட்ட சிகிச்சைத் திட்டம் வகுக்கப்படுகிறது.

  1. உணவுமுறை (Diet):புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சமச்சீர் உணவு பரிந்துரைக்கப்படுகிறது. காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முழுத்தானியங்கள் மற்றும் போதுமான புரதச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். முழங்கால் மூட்டுத் தேய்மானத்தைக் குணப்படுத்தும் குறிப்பிட்ட உணவு எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
  2. உடல் எடை மேலாண்மை (Weight Management): அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு படிப்படியாக எடையைக் குறைப்பது முழங்காலில் ஏற்படும் சுமையை குறைத்து, வலி மற்றும் செயல்பாட்டுக் குறைபாட்டை மேம்படுத்த உதவும்.
  3. வாழ்க்கைமுறை மாற்றங்கள் (Lifestyle Modification):நீண்ட நேரம் நிற்பது, அடிக்கடி படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது மற்றும் வலியை அதிகரிக்கும் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவைக்கேற்ப நடை உதவிச் சாதனங்கள் (Walking aids), முழங்கால் பிரேஸ் (Knee brace) மற்றும் அன்றாடச் செயல்பாடுகளில் மாற்றங்கள் பரிந்துரைக்கப்படலாம்.
  4. மருந்து சிகிச்சை (Medication):வலியைக் கட்டுப்படுத்துவதற்காக, மருத்துவரின் ஆலோசனை யின்படி மேற்பூச்சு வலி மருந்து முதன்மையாகப்பரிசீலிக்கப்படும். தேவையான சில நோய் பாதித்தவர் களுக்கு, உடல்நிலை, வயது, சிறுநீரகம்/கல்லீரல் செயல்பாடு, வயிற்றுப் புண் மற்றும் இதய நோய் அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குறுகிய காலத்திற்கு வாய்வழி வலி மருந்துகள் வழங்கப்படும். இம்மருந்துகள் வயிற்று இரத்தப்போக்கு, சிறுநீரக பாதிப்பு மற்றும் இரத்த அழுத்தம்/இதய அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்; எனவே மருத்துவரின் கண்காணிப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  5. மின்சிகிச்சைகள் (Physical Modalities): TENS (Transcutaneous Electrical Nerve Stimulation), IFT (Interferential Therapy), Therapeutic Ultrasound மற்றும் PEMF (Pulsed Electromagnetic Field Therapy) ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியைக் குறைக்கும் துணைச் சிகிச்சைகளாகப் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், இவற்றின் செயல்திறனுக்கான ஆதாரங்கள் மாறுபடுகின்றன; எனவே, இவை முதன்மைச் சிகிச்சைகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படக் கூடாது.
  6. உடற்பயிற்சி சிகிச்சை (Exercise Therapy): Quadriceps மற்றும் hip muscle strengthening, Range of Motion exercises, hamstring stretching, நடைப்பயிற்சி, stationary cycling மற்றும் சமநிலைப் பயிற்சிகள் முக்கியமானவை. நோய் பாதிக்கப்பட்டவரின் வலி மற்றும் உடல் திறனுக்கு ஏற்ப பயிற்சிகள் படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும்.
  7. ஊசி சிகிச்சைகள் (Intra-articular Interventions):மேற்கண்ட சிகிச்சைகளால் போதுமான நிவாரணம் கிடைக்காத தேர்ந்தெடுக்கப்பட்ட நோய் பாதிக்கப் பட்டவர்களுக்கு மூட்டுக்குள் ஊசி சிகிச்சைகள் பரிசீலிக்கப்படலாம். Corticosteroid injection குறுகிய கால வலி நிவாரணம் அளிக்கக்கூடும். Platelet-Rich Plasma (PRP) சில நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி மற்றும் செயல்பாட்டில் முன்னேற்றம் அளிக்கக்கூடும்; ஆனால் அதன் செயல்திறன் குறித்த ஆதாரங்கள் மற்றும் தயாரிப்பு முறைகள் மாறுபடுகின்றன. Viscosupplementation (Hyaluronic Acid injection) சில இடங்களில் பயன்படுத்தப்பட்டாலும், அதன் மருத்துவப் பயன் குறித்த ஆதாரங்கள் முரண்பாடானவை; வழக்கமான பயன்பாட்டை பல வழிகாட்டுதல்கள் பரிந்துரைப்பதில்லை.
  8. Genicular Nerve Block: வழக்கமான சிகிச்சைகளுக்குப் போதுமான பயன் கிடைக்காத நாள்பட்ட முழங்கால் வலி உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, Genicular nerve block மூலம் வலி நிவாரணம் மதிப்பிடப்படலாம். இது சில நோய் பாதிக்கப்பட்டவர்களில் அடுத்தகட்ட Radiofrequency Ablation (RFA) சிகிச்சையைப் பரிசீலிக்க உதவுகிறது.

இதனால் சிலருக்கு நடைப்பயிற்சி மற்றும் அன்றாடச் செயல்பாடுகள் மேம்படலாம். இருப்பினும், இது மூட்டுத் தேய்மானத்தைச் சரிசெய்யாது; சிகிச்சையின் செயல்திறன் (efficacy)நபருக்கு நபர் மாறுபடும்.

முடிவுரை: முழங்கால் மூட்டுத் தேய்மானத்தின் சிகிச்சையில் உணவுமுறை, உடல் எடை மேலாண்மை, வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை அடிப்படையாகும்.

மின்சிகிச்சைகள் மற்றும் ஊசி அல்லது நரம்பு சார்ந்த தலையீடுகள் நோயாளியின் தேவைக்கேற்ப துணை முறைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கடுமையான வலி மற்றும் செயல்பாட்டுக் குறைபாடு தொடர்ந்து நீடித்தால், மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பிற சிகிச்சைத் தேர்வுகளும் மதிப்பிடப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து வகை சிகிச்சை முறைகளும் கலைஞர் கருணாநிதி நகர், அரசு புனர்வாழ்வு மய்யத்தில் (Government institute of rehabilitation centre) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருக்கிறது. மேற்குறிப்பிட்ட சிகிச்சை, ஆலோசனை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் புற மருத்துவப் பயனாளிப் பிரிவில் வார இறுதி நாட்கள் (ஞாயிற்றுக்கிழமை) , மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் 12 மணி வரை சிகிச்சை பெற்று பயனடையலாம்.

நமது நிலையம் அசோக் நகர் மெட்ரோ ரயில் (metro station) அருகில், கலைஞர் கருணாநிதி நகர் அரசு புற மருத்துவமனை எதிரில் அமைந்துள்ளது.

மறுவாழ்வு மருத்துவத்தின் (physical medicine and rehabilitation)தனித்துவமான அணுகுமுறை “வலியைக் குறைப்பது மட்டுமல்ல; செயல்திறனை மேம்படுத்தி சுயசார்பு வாழ்க்கையை உருவாக்குவது எங்கள் முதன்மை நோக்கம்!”

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *