அய்தராபாத்தில் வருகிறது இந்தியாவின் முதல் ‘ஏஅய்’ காவல் நிலையம்!

2 Min Read
- Advertisement -

அய்தராபாத், நவ. 16– தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையம், இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம் சார்ந்த காவல் நிலையமாக மேம்படுத்தப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சி.வி. ஆனந்தின் வழிகாட்டுதலின் கீழ், முன்னோடித் திட்டமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆணையர் சஜ்ஜனார், பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் கடந்த 11.11.2026 அன்று உதவி ஆணையர் முரளி கிருஷ்ணா, ஆய்வாளர் ஜஹாங்கீர் ஆகியோருடன் இணைந்து அங்கு அமைக்கப்பட்டு வரும் ஏஅய் தொழில்நுட்ப வசதிகளை நேரில் ஆய்வு செய்தார்.

புகார் அளிக்க வந்திருந்த பொது மக்களிடம் நேரடியாகப் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துடன், காவல் நிலையப் பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்தார்.

“டிசம்பர் முதல் வாரத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் இந்த ஏஅய் காவல் நிலையம் முன்னோடித் திட்டமாகத் தொடங்கி வைக்கப்படும். இதன் செயல்பாடுகள், மக்களின் கருத்துகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் சஜ்ஜனார் கூறினார்.

காவல் நிலைய வரவேற்பறையில் நிறுவப்பட்டுள்ள ‘சேது’ (Sethu) தானியங்கி இயந்திரம் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 10 மொழிகளில் புகார்களைப் பதிவு செய்யலாம். ஏஅய் தொழில்நுட்பம் அவற்றை உள்ளூர் மொழிக்கு மொழி பெயர்த்து சில நொடிகளிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும்.

முதல் தகவல் அறிக்கை (எஃப்அய்ஆர்) பதிவு செய்வது முதல் வழக்கு நாட்குறிப்பு, புலனாய்வு அறிக்கைகள் மற்றும் குற்றப்பத்திரிகை தயாரிப்பது வரை அனைத்தும் ஏஅய் மூலம் மேற்கொள்ளப்படும்.

மேலும், பஞ்சகுட்டா பகுதியின் போக்குவரத்து நெரிசல், விடுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் குற்றப் பின்னணித் தரவுகளை ஏஅய் மூலம் பகுப்பாய்வு செய்து ‘புளூ கோல்ட்ஸ்’ (Blue Colts) கண்காணிப்புப் பணிகள் திறம்பட இயக்கப்படும் என்றும், இதற்காகப் பணியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *