போதைப் பொருளால் உயிரிழப்பு நிகழ்ந்தால் பணியிடை நீக்கம்! காவல்துறை தலைமை இயக்குநர் எச்சரிக்கை!

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 16- போதைப் பொருள் உட்கொண்டதால் யாராவது உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்படுவார் என்று காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்து உள்ளார்.

இதுதொடர்பாக மண்டல காவல்துறைத் தலைவர்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அவர் பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, போதைப் பொருள் உட்கொண்டதால் யாராவது உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்.

அதேபோல, சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய விசாரணை அமைப்புகள் போதைப் பொருட்களை கைப்பற்றினாலும், அந்த காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியான ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்படுவார். மெத்தனமாகச் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்களின் கண்களுக்குத் தெரியும் வகையிலான ‘விஷுவல் போலீஸிங்’ கண்காணிப்புப் பணிகளை அதிகரிக்க வேண்டும். மாவட்ட அளவிலும் சோதனைகள், தேடுதல் நடவடிக்கைகளை நடத்த வேண்டும்.

இந்த உத்தரவின்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த செயல் அறிக்கையை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *