வேலூர், நவ. 16- வேலூர் சத்துவாச்சாரியில் இயக்க செயல்வீரர் வீரமணி மகன் தமிழ்ச்செல்வன்-அஸ்வினி மணவிழா நேற்று (15.11.2026) காலை 8 மணி முதல் 9 30 மணி வரை கொள்கை விழாவாக முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
தத்துவப் பேராசான் தந்தை பெரியாரால் தொடக்கி வைக்கப் பட்ட சுயமரியாதைத் திருமணம் ஓரிரு ஆண்டில் நூற்றாண்டை காண இருக்கிறது. சுயமரியாதை திருமணத்தின் பெருமைகள் சிறப்புகள் பாதுகாக்கப்படும் மொழிமானம், இன மானம், மூடநம்பிக்கை ஒழிப்பு, ஆண் பெண் சமத்துவம், சடங்கு சம்பிரதாய முறியடிப்பு என்ற பல்வேறு சிறப்பு களைப் பெற்ற சிறப்பான முறைகளை விளக்கிய உரையாக மணவிழாவை நடத்தி வைத்த முனைவர் துரை சந்திரசேகரன் உரை அமைந்தது.
மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் ஞானசேகரன், மாவட்ட கழகத் தலைவர் சிவக்குமார், மாவட்ட கழகக் காப்பாளர் சடகோபன், மேனாள் மாவட்டச் செயலாளர் சிகாமணி, மருத்துவர் அணி மாநிலப் பொறுப்பாளர் பழ.ஜெகன் பாபு, கலைமணி நாகம்மாள் ஈஸ்வரி லதா, குடியாத்தம் அன்பரசன், குடியாத்தம் மோகன், சீனிவாசன், தயாளன், சங்கநதி, மாநகரத் தலைவர் சந்திரசேகரன், சுப்பிரமணியம், செல்லதுரை, பெரியார் பெருந்தொண்டர் கணேசன் ஆகியோர் மணவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேனாள் மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன் வரவேற்புரை ஆற்றினார். ஆர் வேலு நன்றி கூறினார்.
விடுதலை வளர்ச்சி நிதி
மணமகனின் தந்தை வீரமணி விடுதலை வளர்ச்சி நிதியாக 3000 ரூபாயை முனைவர் துரை.சந்திர சேகரனிடம் வழங்கினார்.
