பிரேக் செயலிழந்த நிலையிலும் 463 கி.மீ. தொலைவு அதிகாரிகள் உத்தரவால் பயணித்த வந்தே பாரத்!

- Advertisement -

புதுடில்லி, நவ. 16- பிரேக் செயலிழந்த நிலையில் வந்தே பாரத் ரயில் 463 கி.மீ. தொலைவைக் கடந்துள்ளது. இதுகுறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த அக்டோபர் 24ஆம் தேதி ஜார்க்கண்டின் ஹதியா ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேசத் தின் ஜான்சி பகுதிக்கு வந்தே பாரத் ரயிலை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. பயணிகள் இல்லாத அந்த ரயிலை, சரக்கு ரயில் இன்ஜின் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

சரக்கு ரயிலின் இன்ஜின் ஓட்டுநர் முதல் கட்டமாக வந்தே பாரத் ரயிலின் பிரேக் சிஸ்டத்தை சோதனை செய்தார். ஆனால் பிரேக் செயலிழந்த நிலையில் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் எடுத்துரைத்தார். ஆனால் ரயில்வே அதிகாரிகள், பிரேக் சிஸ்டம் நல்ல முறையில் இருப்பதாகக் கூறி ரயிலை கொண்டு செல்ல உத்தரவிட்டனர்.

பிரேக் செயலிழந்த நிலையில் சுமார் 463 கி.மீ. தொலைவுக்கு வந்தே பாரத் ரயிலை, இன்ஜின் ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். உத்தர பிரதேசத்தின் சந்தவுலி பகுதியில் அவர் ரயிலை நிறுத்திவிட்டார். அதற்கு மேல் ரயிலை இயக்குவது சாத்தியமில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இதுதொடர்பாக ரயில்வே மூத்த அதிகாரி களிடம் அவர் எழுத்துப் பூர்வமாக புகாரும் அளித்தார். இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் உயர்நிலை விசாரணையை நடத்தி வருகிறது. தவறிழைத்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *