யேமன் மீது சவூதி ட்ரோன் ஏவுகணைகள் வீச்சு பஹ்ரைனில் ஈரான் தாக்குதல்

1 Min Read
- Advertisement -

சனா, நவ. 16- மேற்காசிய பகுதியில் மோதல்கள் நீடித்துவரும் நிலையில், யேமன் தலைநகர் சனாவில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் ஏவி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலை சவூதி அரேபியா நடத்தியுள்ளதாக ஹூதி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் தளம் மீது தாக்குதல் நடத்தி, ரேடார் அமைப்பை சேதப்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரியில் மூண்ட போர், தற்போது அப்பகுதி மோதலாக விரிவடைந்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சிக் குழுவினர், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்தச் சூழலில், யேமன் தலைநகர் சனாவில் உள்ள குடியிருப்புகளைக் குறிவைத்து, ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை ஏவி ஞாயிற்றுக்கிழமை அதிகாலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 2 குழந்தைகள், 2 பெண்கள் என நால்வர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இத்தாக்குதலை சவூதி அரேபியா நடத்தியதாக ஹூதி அமைப்பினர் தெரிவித்தனர்.

அதேநேரம், சவூதி அரேபியாவின் ரியாத் நகரை நோக்கி ஹூதி அமைப்பினர் ஏவிய ஏவுகணைகள் நடுவானிலேயே முறியடிக்கப்பட்டன; எண்ணெய் வளம்மிக்க கிழக் குப் பகுதியை நோக்கிச் செலுத்தப் பட்ட ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று சவூதி ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பஹ்ரைனில் தாக்குதல்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் தளம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ரேடார் அமைப்பு சேதமடைந் ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்தக் கூற்றை மறுத்துள்ள பஹ்ரைன் ராணுவம், தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் ட்ரோன்கள் தடுக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்து உள்ளது. அதேநேரம், அமெரிக்க ராணுவத் தரப்பில் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *