கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்எல்ஏ மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் – பெ.சண்முகம்

1 Min Read
- Advertisement -

திண்டுக்கல், நவ. 14- “கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்ய வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு” என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

“திருப்பரங்குன்றத்தில் நவம்பர் 24இல் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் வழக்க மாக தீபம் ஏற்றப்படும் இடத்துக்குப் பதிலாக புதிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்துத்துவா அமைப்புகள் நீதிமன்றத்துக்கும் அரசுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கின்றன. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நவம்பர் 17இல் தீர்ப்பளிக்க உள்ளது. மத அமைப்புகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருவதை மார்க் சிஸ்ட்  கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு அத்தொகுதி எம்எல்ஏ பாலியல் ரீதியான குறுஞ் செய்தி அனுப்பினார் என்பது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து, குற்றங்களைத் தடுத்து விசாரிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆட்சியருக்கே இப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பது மிகப் பெரிய அதிர்ச்சி யாகும். எனவே, சம்பந்தப் பட்ட எம்எல்ஏ மீது உடனடியாக வழக்குப் பதிந்து அவரை கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

ஒருவேளை அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றால், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்தான் அதை மறுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காப்பது மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசு இந்த விசயத்தில் வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொண்டதாகத் தெரிய வில்லை. மக்களின் எதிர்பார்ப்பு களை இந்த அரசு பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் தற்போதைய கள நிலவரமாக உள்ளது” என்று அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *