மாவட்டச் செயலாளரை கண்டித்து ஆரணியில் த.வெ.க. மகளிர் அணியினரே போராட்டம்!

1 Min Read
- Advertisement -

திருவண்ணாமலை, நவ.14- ஆரணியில் தவெக மாவட்டச் செயலாளரைக் கண்டித்து அக்கட்சியின் மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தவெக செயலாளராக செய்யாறு பகுதியைச் சேர்ந்த சத்யா பதவி வகித்து வருகிறார். இவரது கட்சி அலுவலகம் ஆரணியில் உள்ளது. மாவட்டச் செயலாளராக உள்ள சத்யா, கட்சியில் உள்ள பெண் நிர்வாகிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும், தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் நிர்வாகிகள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், தங்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு திருப்பித்தர மறுப்பதாகவும் பெண் நிர்வாகிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில், ஆரணியில் உள்ள தவெக மாவட்டச் செயலாளர் அலுவலகத்தை அக்கட்சியின் மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் நேற்று (13.11.2026) முற்றுகையிட்டனர். கட்சி அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்துக்கு வெளியே இருந்த பேனரில் இடம் பெற்றிருந்த மாவட்டச் செயலாளர் சத்யாவின் நிழற்படத்தில் கருப்பு மை பூசி, மாவட்ட செயலாளரை பதவி நீக்கம் செய்யக் கோரியும், அவரை கண்டித்தும் முழக்கமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆரணி நகர காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்து அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். தவெக மாவட்டச் செயலாளரை கண்டித்து அக்கட்சியின் மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்பத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *