அசாமில் பேருந்து – லாரி மோதி 26 மாணவர்கள் உயிரிழப்பு

1 Min Read
- Advertisement -

காஸிரங்கா, நவ. 14- அசாம் மாநிலத்தில் பேருந்து, லாரி மோதிக் கொண்ட விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. அசாம் மாநிலம் காஸிரங்கா அருகே ராங்கஜன் பகுதியில் நேற்று மினி பேருந்தும், வேகமாக வந்த லாரியும் மோதிக் கொண்டன. மினி பேருந்து போகாகாட் பகுதியிலிருந்து நகோவானை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

பேருந்தில் 45-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்துள்ளனர். சம்பவம் அறிந்த போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து பேருந்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. பேருந்தும் லாரியும் வேகமாக மோதிக் கொண்டதால் அந்த பேருந்து முழுவது மாக உருக்குலைந்து விட்டது.

இதுகுறித்து கோலாகாட் பகுதி மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் ஸ்வப்னாநீல் தேகா கூறும்போது, “பேருந்திலிருந்து ஏராளமான உடல்களை மீட்டுள்ளோம். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “காஸிரங்கா பூங்கா அருகே நடந்த விபத்து குறித்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *