கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.11.2026

3 Min Read
- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ்நாடு ஆளுநர் அமித்ஷாவை சந்தித்து சட்டம் – ஒழுங்கு நிலவர அறிக்கை சமர்ப்பிப்பு: தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, தமிழ்நாட்டில் கொலைகள், குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்து அறிக்கை அளித்தார்; எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் மீதான புகார்களும் அதில் இடம்பெற்றன.

* தமிழ்நாடு அரசு திருப்பரங்குன்றம் கோயிலை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க எதிர்ப்பு: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் மலைப்பகுதியை இந்திய தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் கொண்டுவரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எதிர்த்துள்ளது.

* பிரதமர் மோடி எனது தொலைபேசியை ஒட்டுக் கேட்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு. பிரதமர் மோடி தனது தொலைபேசியை ஒட்டுக் கேட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். அதானி அல்லது மோகன் பாகவத் நடுவராக இருந்து, மோடியுடன் நேரடி பொது விவாதம் நடத்த தயார் என்றும் சவால் விடுத்தார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 150 ஆண்டு கால கார்த்திகை தீபம் மரபே தொடர வேண்டும்,  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம். 1996ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளே தொடர்ந்து நடைமுறையில் உள்ளன என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. கோயில் நிர்வாகம் மட்டுமே பாரம்பரிய இடத்தில் தீபம் ஏற்றலாம்; இடத்தை மாற்ற இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) துறையின் முன் அனுமதியும் அவசியம் என வலியுறுத்தியது.

தி இந்து:

* வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டமான (FCRA) திருத்த மசோதா 2026 மசோதா குறித்து விரிவான ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை. மசோதா தொடர்பாக நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள் உள்ளிட்ட அமைப்புகளிடம் கருத்துக் கேட்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரினர். டில்லிக்கு நேரில் வந்து கருத்துத் தெரிவிக்க இயலாத சிறிய அமைப்புகளின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

தி டெலிகிராப்:

* மகாராஷ்டிரா திட்டச் செலவு 99% குறைப்பு: அதானி குழுமம் மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை. ரூ.5,675 கோடியாக அனுமதிக்கப்பட்ட 1,500 மெகாவாட் மின் சேமிப்பு திட்டத்தின் செலவு ரூ.56.75 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார். இதனால் வனவிலங்கு சரணாலய பாதுகாப்புக்கான அதானி நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பும் ரூ.227 கோடியிலிருந்து ரூ.2.27 கோடியாகக் குறைந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஒருவரின் ஓபிசி அந்தஸ்து நிரந்தரமானதோ, தானாகவே கிடைக்கக்கூடியதோ அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை. ஓபிசி பட்டியலில் ஒரு சமூகத்தைச் சேர்ப்பதற்கோ தொடர்ந்து இடம் பெறச் செய்வதற்கோ தெளிவான ஆதாரங்கள் அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. கிறிஸ்தவ நாடார், சாணார், கிராமணி உள்ளிட்ட சில சமூகங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்டத்தின் அட்டவணையில் சேர்த்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15(1), 16 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது என மதுரையைச் சேர்ந்த மனுதாரர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *