கொள்கைப் பரப்பு நிகழ்வாக நடைபெற்ற கடலூர்-செம்மங்குப்பம் சித்ரா செந்தில்நாதன் நினைவேந்தல் படத்திறப்பு!

1 Min Read
- Advertisement -

மதுக்கரை, நவ. 14– கடலூர்-செம்மங்குப்பம் மதுக்கரைப் பகுதி கழகத் தோழர் செந்தில்நாதனின் வாழ்விணையர் சித்ரா செந்தில்நாதன் கடந்த 27.10.2026 அன்று மறைவெய்தியதை  முன்னிட்டு 12.11.2026 அன்று காலை 11 மணி அளவில் அவரின் நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்ச்சி கடலூர் மாநகர கழகத் தலைவர் தென்.சிவக்குமார் தலைமையில், மாவட்டச் செயலாளர் எழிலேந்தி முன்னிலையில் நடைபெற்றது.

இடிமுழக்கம் இந்திரஜித் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நினைவு உரையாற்றினார்.

மனித வாழ்வின் சிறப்புகளை ,தந்தை பெரியாரின் அரிய மனிதநேய தொண்டினை, தமிழர் தலைவர் ஆசிரியரின் அயராத தொண்டினை விளக்குவதாக உரை அமைந்தது. ஒன்றிய கழகச் செயலாளர் மனகுப்பம் தர்மன், மாவட்ட துணைத் தலைவர் சி.மணிவேல், பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்டத் தலைவர் மாணிக்கவேல், இளைஞரணிப் பொறுப்பாளர் வேலு, மாவட்ட ப.க.  அமைப்பாளர் தர்மலிங்கம், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் ஆகியோர் நினைவுரை ஆற்றினர். படத்திறப்பு நிகழ்ச்சி கொள்கை பரப்பும் நிகழ்வாக நடைபெற்றது. முடிவில் அறிவுச்செல்வம், அன்புமதி ஆகியோர் நன்றி உரைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *