கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வெவ்வேறு கட்டமைப்புத் திறனுடன் மடிக்கணினி வழங்க அரசு திட்டம்

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 13– தேவை, பயன்பாட்டுக்கு ஏற்ப கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வெவ்வேறு மடிக்கணினிகள் வழங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

தேசிய கல்வி நாள் மற்றும் தேசிய உருது நாள் விழா சென்னை பல்கலைக்கழக கலைய ரங்கத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் 11.11.2026 அன்று நடைபெற்றது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களுக்கிடையே நடைபெற்ற உருது கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற 33 பள்ளிகள், 29 கல்லூரிகளைச் சேர்ந்த 627 மாணாக்கர்கள், 10 உருது கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் 30 ஆண்டுகளுக்கு மேலாக உருதுப் பள்ளிகளில் பணிபுரியும் 23 ஆசிரியர் களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார். விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேசிய தாவது:

கல்லூரி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அதிநவீன மடிக்கணினிகளை மிக விரைவில் வழங்குவதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டது. மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவம், இளங்கலை வேளாண்மைப் பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறுவர்.

மாணவர்களின் படிப்புத் துறைக்கு ஏற்ப அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் வெவ்வேறு கட்டமைப்புத் திறன்களை (Configuration) கொண்ட மடிக்கணினிகள் வடிவமைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் தேவைகளுக்கு ஒரு விதமான கட்டமைப்பும், பொறியியல் மாணவர்களின் பயன்பாட்டுக்குத் தகுந்தவாறு மேம்பட்ட மற்றொரு விதமான கட்டமைப்பும் கொண்ட மடிக்கணினிகளாக வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *