செங்கல்பட்டு, நவ. 13– செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடை பெற்ற சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 109 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நேற்று (12.11.2026) நடைபெற்றது. இதில் 26 முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தினர். 258 ஆண்கள், 174 பெண்கள் என மொத்தம் 432 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். இவர்களில் 68 ஆண்கள், 41 பெண்கள் என 109 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 268 பேர் இரண்டாம் கட்டத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு ஆட்சிக்கு மு.வீரப்பன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஃபர் ஹத் பேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
