சுயமரியாதை நாள் பெருவிழாவில் குடும்பத்தோடு பங்கேற்போம் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

- Advertisement -

கல்லக்குறிச்சி, நவ. 13- கல்லக் குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக கலந்து ரையாடல் கூட்டம் வடக்கநந்தல் மாவட்ட கழக மகளிரணி தலைவர் பழனியம்மாள் கூத்தன் இல்லத்தில் 9.11.2026 திங்கள் கிழமை மாலை 6:00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமையில் குழ. செல்வராசு மாவட்ட செயலாளர் கழக முன்மொழிய மாவட்ட கழக மகளிரணி தலைவர் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்த மாவட்ட இலக்கிய அணித் தலைவர் புலவர் பெ. சயராமன், சின்னசேலம் ஒன்றிய கழகத் தலைவர்  க.அசன், மாவட்ட ப.க. தலைவர் பெ. எழிலரசன், மாவட்ட ப.க. அமைப்பாளர் சி.முருகன் ஆகியோர்கள் முன்னிலையிலும், நிகழ்ச்சியின் செயலாக்க உரையாக மாநில திராவிடர் கழக ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு குண சேகரன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியும் தந்தை பெரியார் கொள் கைகளை ஜப்பான் போன்று உலகம் முழுவதும் பரப்புவது போன்ற செயல்பாடுகள் பற்றியும் தமிழர் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி மேனாள் பொருளாளர் கோ. சாமிதுரை ஆகியோரின் நட்பு பற்றியும் விளக்கமாக உரை யாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மாநில மாணவர் கழகச் செயலாளர்  செந்தூர பாண்டியன்  மாணவர் கழக செயல்பாடுகள் குறித்தும் விளகவுரையாற்றினார்.

மாவட்டக் கழகத் தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் குழ.செல்வராசு, கே.எம். ராஜேத்திரன் திரவண்ணாமலை மாவட்ட ப. க இணைச் செயலாளர், இராம.முத்துசாமி நகர தலைவர், மாத்தூர் கழக தலைவர் ஏ.எஸ். துரைராஜ், புலவர் பெ. சயராமன் மாவட்ட இலக்கிய அணி தலைவர், கா.அசன் ஒன்றிய கழக தலைவர், ஏ.கலைஞன் வழக்குரைஞர், நா.பெரியார் நகர கழக செயலாளர், கூ.தமிழரசன், உரத்தநாடு மணி கண்டன், மா.ஏழுமலை, செ.கோகுல், கூ.தமிழ்மணி, மு.பெரிய சாமி, பெ.எழிலரசன் மாவட்ட ப.க. தலைவர், சி.முருகன் மாவட்ட ப.க. அமைப்பாளர் மற்றும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப் பித்தார்கள்.

வரும் 14.11.2026 தஞ்சையில் நடைபெறும் தலைமைச் செயர் குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குவது என தீர்மானிக்கப் பட்டது.

தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த சுயமரியாதை நாளான டிசம்பர் 2இல் குடும்பத்துடன் பங்கேற்று வாழ்த்துவதென தீர்மானிக்கப் பட்டது

பெரியார் உலக மயம் உலகம் பெரியார் மயம் என்ற ஒப்பற்றப் பணிகளை 84 ஆண்டுகளாக ஓய் வின்று கொண்டு சேர்க்கும் தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக 94 விடுதலை சந்தாக்களை வழங்குவதென தீர் மானிக்கப்பட்டது

தமிழர் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு அய்யாவின் அடிச் சுவட்டில், வாழ்வியல் சிந்தனைகள் நூல்களின் அறிமுக விழாவை நமது மாவட்டத்தில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது

வரும் 15.11.2026 மேனாள் கழகப் பொருளாளர் சுயமரியாதைச் சுடரொளி கோ.சாமிதுரை அவர்களின் பெயரில் நடக்கும் விருது விழாவிலும் உடன் நடைபெறும் கழகத் தோழர்கள் சந்திக்கும் குடும்ப விழாவிலும் குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டு சிறப்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது

மாவட்டத்தின் புதிய பொறுப் பாளர்களை மாநில கழக ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு குண சேகரன் அறிவித்தார்.

ஏ.கலைஞன் வழக்குரைஞர் வடக்கநந்தல் நகர கழகத் தலைவர்

மு.பெரியசாமி முனைவர் வடக்கநந்தல் நகர கழகச் செயலாளர்

கூ.தமிழ்மணி வடக்கநந்தல் நகரக் கழக இளைஞரணி அமைப்பாளர்

ஏ.கரிகாலன் சங்கராபுரம் நகரக் கழகத் தலைவர்

கலை.அன்பரசு சங்கராபுரம் நகரக் கழகச் செயலாளர்

மா.ஏழுமலை மாவட்ட கழக இளைஞரணித் தலைவர்

செ.கோகுல் சங்கராபுரம் ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர்.

முடிவில் புதிதாக பொறுப்பேற் கும் சங்கராபுரம் ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் செ.கோகுல் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெறிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *