சென்னை, நவ.13 தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களை அவர்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யக்கூடாது என மின்வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக் குநர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட் டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் அடிப்படை விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து, தமிழ் நாடு மின்வாரிய சேவை விதிகளிலும் புதிய துணை விதி சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள சுற்ற றிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
மின்வாரிய ஊழியர்களை அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யக்கூடாது. ஓய்வு நாளில் பணியிடை நீக்கம் செய்யப் படாவிட்டாலும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ‘தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978’-இன் கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள ஊழியர்களின் பணிக்கொடைத் தொகையை முழு மையாக நிறுத்தி வைக்கக்கூடாது. அதற்குப் பதிலாக, அவர்களால் ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்ட அதிகபட்ச நிதி இழப்பு மற்றும் வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை மட்டும் பிடித்தம் செய்துவிட்டு, மீதமுள்ள பணிக்கொடைத் தொகையை வழங்க வேண்டும். ஏற்கெனவே ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் ஓய்வு பெறுவதற்காக மட்டும் அந்த பணியிடை நீக்கம் உத்தரவு ரத்து செய்யப்பட்ட ஊழியர் களுக்கு, அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்ற வியல் வழக்குகள் முழுமையாக முடி வடைந்த பின்னரே பணிக்கொடை வழங்கப்படும்.
இந்தப் புதிய விதிமுறைகளை மின்வாரியத்தின் அனைத்து தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகள் எவ்விதத் தவறுமின்றி கண்டிப்பாகப் பின்பற்ற வேண் டும் என அந்த உத்தரவில் அறிவுறுத் தப்பட்டுள்ளது.
