தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு மேல் மதிப்புடைய அரசுக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள புதிய நிறுவனம்!

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 12- தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு மேல் மதிப்பிலான அரசுக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் என்ற புதிய நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பொதுத்துறை செயலர் ஆர்.செல்வராஜ் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு மேல் மதிப்பிலான அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் என்ற புதிய நிறுவனம் ரூ.1 கோடி தொகுப்பு நிதியுடன் நிறுவப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் கடந்த ஆக.18இல் அறிவிப்பு வெளி யிட்டிருந்தார்.

அதை செயல்படுத்தும் வகையில், பொதுப்பணித் துறை பொறியாளர்- தலைமை இயக்குநர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) அரசுக்கு முன்மொழிவு அனுப்பியிருந்தார்.

அதையேற்று தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகத்தை முழுமையாக அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனமாக அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் மூலம் மாநிலத்தில் ரூ.200 கோடிக்கு மேல் மதிப்பிலான அரசு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். பயன்படுத்தப்படாத அரசு நிலங்களில் கட்டடங்களைக் கட்டி அரசுக்கு வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான தனியார் நிறுவனங்கள் அறிவிக்கும் கட்டுமான ஒப்பந்தங் களிலும் உரிய நடைமுறைகளின்படி இந்த நிறுவனம் பங்கேற்கலாம்.

இதுதவிர, பெருநகரங்கள், தொழில்துறை மய்யங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப நகரங்கள், வணிகப் பூங்காக்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதும், திட்ட மேலாண்மை ஆலோசனை, கட்டடக்கலை வரைபடங்கள் தயாரித்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு சேவைகளை வழங்குவதும் இந்த நிறுவனத்தின் முக்கியப் பணிகளாக இருக்கும்.

இந்த நிறுவனம், மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப அமைக்கப்பட உள்ளது. அதனுடன் அரசின் சார்பில் ஒதுக்கப்படும் பணிகளை ஒப்பந்ததாரர் மூலம் செயல்படுத்தும் வகையில் பணிகளையும் மேற்கொள்ளும்.

புதிய நிறுவனத்தின் அங்கீகரிக் கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.15 லட்சமாகவும், தொடக்கத்தில் செலுத்தப்பட்ட பங்கு மூல தனம் ரூ.10 லட்சமாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்படுவ துடன், சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட முகமைக்கான கட்டணமும் பெறப்படும்.

மேலும், சென்னை மெட்ரோ அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட் (CMAML) தற்போதைய வரம்புக்குள் உள்ள நிலங்களின் வணிக மேம்பாட்டுப் பணிகள், இந்த புதிய நிறுவனத்தின் செயல்பாட்டு வரம்பில் இருந்து விலக்கப்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *