ChatGPT யிடம் சென்னை யில் வாடகைக்கு வீடு தேடச் சொன்னேன். நல்லா தேடிப் பிடிச்சு தினம் சில வீடுகளை Google Sheetஇல் சேர்த்துக்கிட்டிருக்கு. பலருக்கும் பயன்படலாம் என்கிற எண்ணத்தில் Prompt கீழே பகிர்கிறேன். இதையே Gemini Spark அல்லது உங்களுக்குப் பிடித்த வேறு ஏ.அய். கருவி கொண்டும் செய்யலாம். ChatGPT கட்டணச் சேவை இருந்தால், வேலை கில்லி மாதிரி முடியும். இல்லை என்றால், உங்கள் rate limitக்கு ஏற்ப சற்று பொறுத்திருந்து வேலையைச் செய்து தரும்.
ஒவ்வொரு நாளும் உங்கள் Google Sheet update ஆகும். ChatGPT appஇல் notification வரும்.
கீழே உள்ள promptஇல் bold textஇல் உள்ள பகுதிகளை உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுங்கள். இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. Promptஇல் parking, மாடி, lift என்று வருகிற இதர கட்டுப்பாடுகளையும் உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்துங்கள்.
No Broker, Magic Bricks போன்ற பல்வேறு தளங்களில் புதிதாக வரும் Listingகளை இது ஒரே இடத்தில் தேடிப் பொறுக்கி எளிதாக compare பண்ணுவது போல மாற்றித் தருகிறது. மற்றபடி நீங்க தான் ownerக்கு அழைச்சுப் பேசணும், வீட்டைப் போய் பார்க்கணும். வாழ்த்துகள்.
(இதற்கான Prompt-களைப் பெற இங்கே உள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.)
