சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரிடம் அறிக்கை கேட்டது ஒன்றிய அரசு

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 12- தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் அர்லேகரை ஒன்றிய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று ஒரே நாளில் 13 கொலைகள் நடைபெற்றன. தலைநகர் சென்னையில் 10.11.2026 அன்று மட்டும் 3 பேர் கொல்லப்பட்டனர். தொடர் குற்ற நிகழ்வுகளால் ஆளும் தவெக அரசை, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து, உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி நூற்றுக்கணக்கான ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சட்டம் – ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் 2-ஆம் நாளாக தலைமைச் செயலகத்தில் நேற்று (11.11.2026) காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் எம்.சாய்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் காவல்துறையின் உளவுப் பிரிவு தலைவர் அஸ்ரா கார்க் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம், அண்மையில் நடைபெற்ற குற்றச்சம்பவங்கள் குறித்த விசாரணையின் நிலை, அரசியல் அழுத்தங்களால் கிடப்பில் போடப்பட்ட வழக்குகள், தொடர் குற்றங்களைத் தடுப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. போதைப் பொருட்கள் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் முதலமைச்சர் ஜோசப் விஜய், காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதற்கிடையில், மாநிலத்தின் சட்டம் –- ஒழுங்கு நிலவரம் குறித்து மாதந்தோறும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தரப்பில் அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம். மாநிலத்தின் காவல் துறைத் தலைமை இயக்குநர் மூலமாக தேவையான விவரங்களைச் சேகரித்து ஆளுநர் இந்த அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அனுப்புவார். தவிர ஒன்றிய உளவுப் பிரிவும் உள்துறைக்கு தனியாக அறிக்கை அளிக்கும்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரிடம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள வன்முறை சம்பவங்கள், மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்து அறிக்கை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *