‘வாபி – சாபி’ என்ற இந்த அரிய பண்பாட்டுத் தளம் மூலம் அது நமது வாழ்க்கையை எவ்வளவு சிறப்பாகச் செப்பனிட உதவுகிறது என்பதை ‘வாபி– சாபி’ நூலாசிரியர் ‘பெத் கெம்ப்டன்’ அவர்கள் சிறப்பான பல தலைப்புகளை அமைத்து, சுவைபட நமக்கு அளித்துள்ளார். ‘வாபி – சாபி’ படித்து சுவைக்கும் உணர்வு வெறும் உணர்வு மட்டுமல்ல; அதையும் தாண்டி, நம் வாழ்வு சீராகும் வகையில் பல வழிகளில் உதவுவதாகவும் உள்ளது என்பதை நன்கு விளக்குகிறார்.
‘தோல்வி’ என்பது எவராலும் எப்ேபாதும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றுதான்!
தோல்வி கண்டு எல்லோரும் அவமானப் படுவார்கள் என்றாலும், சில பக்குவமற்றவர்கள் அழுது புலம்புவது முதல் தற்கொலை முயற்சி வரை சென்று விடுகிறார்கள்!
தோல்வியையும் ஒரே மன நிலையுடன் அணுக வேண்டும். ‘வெற்றி– தோல்வி’ இரண்டும் நம் வாழ்வில் என்றும் மாறி மாறி வரும்!
வெற்றியை மட்டும் கொண்டாடிக் கொண்டு வெறி கொண்டு அலையக் கூடாது!
அறிஞர் அண்ணா சொன்னார்: ‘‘வெற்றி பெற்றவர்கள், தலை சாய்ந்த கதிர் நெல்லைப் போல் அடக்கத்துடன் இருக்க வேண்டும்; தோல்வியுற்றவர்கள் ‘வாழ்வில் இதுதான் கடைசி’ என்ற நம்பிக்கை இழந்த குறுகிய உலுத்துப் போன சிந்தனைக்கு (Pessimistic) ஆளாகி விடக் கூடாது!’’
தோல்வியை ஒரு நல்ல அனுபவமாக – தந்தை பெரியார் கூறிய மொழியில் எழுத வேண்டுமானால் ‘‘புத்திக் கொள் முதலுக்கான அரியதொரு வாய்ப்பு’’ என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
‘வாபி – சாபி’ வாழ்க்கை முறையில், எதையும் முழுமை அடைந்த நிலையை (Perfection) என்று மட்டுமே பார்க்காமல், Imperfection என்பது யதார்த்த வாழ்க்கை, அந்த நிறைவடையாத நிலையை ஏற்று, சுவைக்கும் அனுபவத்தை ஏற்கெனவே பெற்றிருந்தால், தோல்வி கண்டு மிரண்டோடுதல் அல்லது ‘வறண்டு போய் எல்லாம் முடிந்தது என்னவிருக்கிறது என் வாழ்வில் இனி!’ என்ற விரக்தியின் விளம்புக்கு சென்று விடத் தேவையில்லை.
‘ஜென்’ தத்துவத்தைப் பெரிதும் அடிப் படையாகக் கொண்ட ஜப்பானியர்களின் இந்த ‘வாபி – சாபி’ பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சம்: எதிலும் முழுமையை (Perfectionism) எதிர்பார்த்து ஏமாறாத – முழுமைக் குறைவையும் ‘ImPerfectionism’ என்று ஏற்று, மதித்து வாழ நாம் பழக்கப்பட்டால் மனம் தெளிவடையும்.
கலங்கிய உள்ளமும்கூட, தெளிவும், தெம்பும் பெறும் என்பதுடன் வாழ்வில் எதுவுமே நிரந்தரம் (Permanent) கிடையாது என்ற ‘வாபி – சாபி’ வாழ்வியல் தோல்வியையும் அதே கண்ணோட்டத்தில் – அதாவது ‘அதுவே இறுதி, நிரந்தரம்’ என்று மனமுடைந்து போகாமல், நம்பிக்கைச் செடி கருகாமல் இலை உதிர்ந்து, மீண்டும் துளிர்ப்பதைப் போல் – நம்மை எழுச்சி பெறச் செய்ய தோல்வியையும் வாழ்வின் முக்கிய அம்சமாகவும், நம்மைப் பக்குவப்படுத்தும் அரிய பாடமாகவும் மாற்றிடும்.
எல்லா நாள்களும் ஒரே மாதிரி இருப்ப தில்லையே! அைதயும் எண்ணிப் பாருங்கள்!
(வளரும்)
