ஆறு மாத கால த.வெ.க. ஆட்சி?

- Advertisement -

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த ஆட்சியின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும்போது சட்டம் – ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி, மருத்துவம், தொழில் வளர்ச்சி, தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பார்த்தால் மக்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம்!

  1. சட்டம் ஒழுங்கும் – பெண்கள் பாதுகாப்பும்

* பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

* பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் அரசின் செயல்பாடுகள் போதுமான அளவில் இல்லை.

* காவல்துறையின் செயல்பாடும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளும் திருப்திகரமாக இல்லை.

* காவல் துறையினரே கொல்லப்படும் அவலம்!

* சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடும் அளவுக்குப் பொறுப்பின்மை.

  1. விலைவாசி உயர்வு

* அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து மக்கள் கடும் அதிருப்தி.

* குடும்பங்களின் மாதாந்திரச் செலவுச் சுமையைக் குறைக்கப் போதிய நடவடிக்கைகள் இல்லை.

  1. வேலைவாய்ப்பின்மை

* இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தோல்வி.

* ஒப்பந்த முறையில் பணியாளர்கள் நியமனம்!

* அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதில் தாமதம்.

* ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட ஆட்சேர்ப்பு நடவடிக் கைகளில் உள்ள சிக்கல்கள்.

* தேர்தல் காலத்தில் அளித்த வேலைவாய்ப்பு உறுதி மொழிகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு.

  1. தொழில், பொருளாதார வளர்ச்சி

* புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கான முதலீடுகள் நடைமுறைக்கு வரவில்லை.

* அறிவிக்கப்பட்ட முதலீடுகளுக்கும் உண்மையில் உருவான வேலை வாய்ப்புகளுக்கும் இடையிலான வேறுபாடு.

  1. கல்வியும் மருத்துவமும்

* அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில்  முன்னேற்றம் இல்லை.

* அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலி யர்கள், மருத்துவ வசதிகள் குறித்த குறைகள்.

* பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்புவதில் தாமதம்.

  1. தேர்தல் வாக்குறுதிகள் – நிறைவேற்றப்படவில்லை

* மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 அறிவிப்பு நடை முறைப்படுத்தப்படவில்லை.

* ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு உருளைகள் – வாக்குறுதி முழுமையாக நிறை வேற்றப்படவில்லை.

* விவசாயக் கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்.

* பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.

* ஊழலற்ற நிர்வாகம் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை என்பவையெல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றன. இக்குறுகிய காலத்திலேயே பல குற்றச்சாட்டுகளும், முறை கேடுகளும், உண்மையை மறைக்கும் நடவடிக் கைகளும் ஏராளமாக எழுந்துள்ளன.

  1. அரசின் நிர்வாகத் தடுமாற்றங்கள்

அய்ந்து மாதங்களுக்குள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து காவல்துறையின் சட்டம் ஒழுங்குத் துறைக்கு விலக்கு அளித்த உத்தரவு பின்னர் திரும்பப் பெறப்பட்டது உள்ளிட்ட அய்ந்துக்கும் மேற்பட்ட முக்கிய அரசு உத்தரவுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஆனால், எந்தப் பிரச்சினைக்கும் முதலமைச்சர் வாய் திறப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேசு பொருளை உருவாக்கி, தங்கள்மீதான பிரச்சினைகளைத் திசை திருப்பிக் காலத்தை ஓட்டி விடலாம் என்று கருதுகிறது அரசு, முதலமைச்சர் பேசுவதேயில்லை. அமைச்சர்கள் பொறுப்பான பதில் அளிப்பதில்லை. மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே கிடக்க, வெறும் காட்சிகள் மட்டுமே ஆட்சியின் அன்றாடம் என ஆகியிருக்கிறது.

ஒட்டு மொத்தமாக கூட்டிக் கழித்தால்  ஆறு மாத த.வெ.க. ஆட்சி தேர்ச்சி பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *