சென்னை, நவ. 12- தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்காக தனியாருடன் ஒப்பந்தம் போடுவதற்கான ஒப்பந் தத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளி யிட்டிருக்கும் ஒப்பந்தத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வ தற்காக தனியார் நிறுவனங் களிடமிருந்து ஒப்பந்தம் கோரப்படுகிறது.
வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் வரை தொடர்ந்து 2 ஆண்டுகள் ஒப்பந்தத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நிகழ்வு களை முழுமையாக தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் தடையின்றி நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்கான் தொழில்நுட்பப் பணிகளுக் காக தமிழ்நாடு அரசு ஒப்பந்தப் புள்ளி கோரி யிருக்கிறது.
