தெலங்கானாவில் உயிருடன் இருக்கும் 22 பேருக்கு இறப்புச் சான்று வழங்கி மோசடி!

- Advertisement -

திருமலை, நவ. 12- அரசின் ‘டிஜிட்டல் சாவி’யை பயன்படுத்தி உயிருடன் இருக்கும் 22 பேரின் பெயர்களில் இறப்புச் சான்றிதழ்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட நிகழ்வு பர பரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

தெலங்கானா மாநிலம், சித்திப்பேட் மாவட்டம், செரியாலா மண்டலத்திலுள்ள ராம் பூர் கிராம பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றி யவர் மது. இவர், தனது வசம் இருக்க வேண்டிய டிஜிட்டல் சாவியை (இ-சைன் டோங்கிள்), அதே கிராமத்தைச் சேர்ந்தவரும் அய்தராபாத்தில் இணைய மய்யம் நடத்தி வருபவருமான ஷவல்லா ரமேஷிடம் ஒப் படைத்துள்ளார்.

இந்த டிஜிட்டல் சாவியைப் பயன்படுத்தி, ரமேஷ் கடந்த 6 மாதங் களில் 22 போலி இறப்புச் சான்றிதழ்களை உருவாக்கியுள்ளார். காப்பீட்டுப் பணம் உள்ளிட்டவற்றை பெறுவ தற்காக அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயிருடன் இருக்கும் வேறு சிலரின் பெயர்களில் போலி மரணச் சான்றிதழ்களை வழங்கியுள்ளார். பஞ்சாயத்து செயலாளர் மதுவின் அலட்சியம் குறித்த புகார்களைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை கிராம பஞ்சாயத்து பொறுப்புகளிலிருந்து நீக்கி, சில காலத்திற்கு முன்பு எம்.பி.டி.ஓ. அலுவலகத்திற்குப் பணியமர்த்தினர். இருப்பினும் போலிச் சான்றிதழ்கள் மோசடி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு வந்ததால் அவர் அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு செயலா ளர் மதுவை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மறுபுறம் எம்.பி.ஓ. அளித்த புகாரின் அடிப்படையில் பஞ்சாயத்து செயலாளர் மது மற்றும் இணைய நிர்வாகி ரமேஷ் மீது காவல்துறையினர் 10.11.2026 அன்று வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அரசு விதிமுறைகளின் படி ரகசியமாக வைத் திருக்க வேண்டிய ‘டிஜிட் டல் சாவியை’ (இ-சைன் டோங்கிள்), அரசின் பொறுப்பையும் டிஜிட்டல் பாதுகாப்பையும் புறக் கணித்து ஒரு தனி நபரிடம் ஒப்படைக்கப்படும்போது என்ன நடக்கும் என்பது இவை தெளிவுபடுத்துகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *