சட்டப்பேரவையில் இன்று திருவள்ளூரில் அமோனியா வாயுக் கசிவு விவகாரம் சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அமைச்சர் பர்வேஸ் விளக்கம்

2 Min Read

சென்னை, ஜூன் 22- திருவள்ளூரில் அமோனியா வாயுக் கசிவு விவகாரம் பற்றி சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகை பேர் கிராமத்தில் 21.06.2026 அன்று [St Peter & Paul Sea Food Exports Private Limited (Registration No: TVR08603) என்ற கடல் உணவுகளை பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில், பனிக்கட்டிகளை துகள்களை உருவாக்கும் இயந்திரத்திற்கு (ice flakes generator machine-க்கு) செல்லும் குழாயில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அமோனியா வாயு கசிவின் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தின் காரணமாக, இதுவரை அங்கு பணியாற்றும், அந்த வளாகத்தில் தங்கியிருந்த 74 நபர்கள் (70 பெண்கள்,  4 ஆண்கள்) பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதில் 15 நபர்கள் அரசு மருத்துமனையிலும்,

27 நபர்கள் தனியார் மருத்துவம னையிலும், தீவிர சிகிச்சை  பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.  27 நபர்கள் சாதாரண சிகிச்சையில் உள்ளனர்.  சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

இவ்விபத்தில் கெட்டவாய்ப்பாக 5 பெண்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டறிந்து முதலமைச்சர் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சர் பொது நிவாரண நிதிலிருந்து தலா 2 இலட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவர்களின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி, நல்லடக்கம் செய்வதற்கான செலவினை அரசே மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளர். மேலும் இவ்விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தவிட்டுள்ளார்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்து மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு, தொழிலாளர்கள் மாநில ஈட்டுறுதி காப்பீட்டு திட்டம் (ESI), வருங்கால வைப்பு நிதியை (PF)  உடனடியாக  வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விபத்து குறித்து இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, இயக்குநர், பொது சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் – செயலர் அறிக்கையினை 24 மணி நேரத்திற்குள்ளாகவும், முழுமையான விசாரணையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில், இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு விபத்து தடுப்பு நிர்வாகத்தை (Hazardous Industries) உடனடியாக குழு அமைத்து  ஆய்வு செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பேரவைத் தலைவர் வாயிலாக இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *