பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் சொல்லின் செல்வர் சுகிசிவம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பட்டமளிப்பு விழா நடைபெற்ற செப்டம்பர் 19 அன்று உடல் நலம் காரணமாக அவர் நேரில் பங்கேற்க இயலாத சூழல் இருந்தது. எனவே அவரை நேரில் சந்தித்து மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றமைக்கு பல்கலைக் கழகத்தின் வேந்தர் கி. வீரமணி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். (சென்னை, 10.11.2026)
