ஜாதியொழிப்புப் பற்றி மற்றக் கட்சிக்காரர்கள் கவலைப்படாவிடினும் நமக்கு அது உயிர்ப் பிரச்சினை. மற்றக் கட்சிக்காரர்கள் இப் பிரச்சினையில் சம்பந்தப்படுத்திக் கொள்வதில்லை. இதற்காகச் சிறை சென்ற நாம் வாழ்வதற்காகச் சிறையினின்று விடுதலை ஆனோமா? ஜாதி ஒழிப்புப் பிரச்சினையில் நாம் உயிரைக் கொடுத்தாவது வெற்றி பெற வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆகவே மீண்டும் சிறை செல்வதற்காக எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
