துறையூர், நவ.10– திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ரவி சங்கர், தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். துறையூர் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் துறையூரைச் சேர்ந்த கார்த்தி என்பவரும், பத்திரிகையாளர் ஒருவரும் பேரவை துணைத் தலைவர் ரவிசங்கரை சந்தித்து மனு அளிக்கச் சென்றுள்ளனர். கார்த்தியையும், பத்திரிகையாளரையும் பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பான காட்சிப்பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம், துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர், தனது பகுதியில் கடந்த ஒருவார காலமாக குடிநீர் வழங்குவது சீராக இல்லை என்றும், குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதாகவும் நக ராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இருப்பினும், நகராட்சித் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து, தனது தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத் தலைவருமான ரவிசங்கரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள கார்த்திக்குமார் முயன்றதாகவும், ஆனால். அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றும் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 8.11.2026 அன்று அவசர வேலை காரணமாக மண்ணச்சநல்லூர் பகுதிக்கு வந்த கார்த்திக்குமார், அங்குள்ள பேரவை துணைத் தலைவரின் வீட்டின் அருகே அவரை சந்தித்து, தன் பகுதி பிரச்சினைகள் குறித்து முறையிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது, பொதுமக்கள் மத்தியில் கார்த்திக் குமாரைத் தகாத வார்த்தைகளால் பேசிய பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர், அவரை சரமாரியாகத் தாக்கி எட்டி உதைத்து விரட்டி யடித்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான கார்த்திக் குமார், ‘நான் தளபதிக்கு தான் வாக்களித்தேன். இதற்காகத்தான் விஜய்க்கு வாக்களித்தோமா?’ என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பெயரைப் பலமுறை உச்சரித்தும், அத்தாக்குதல் தொடர்ந்ததாகக் கூறப்படும் காட்சிப் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதற்குப் பிறகு, தாக்குதலுக்கு உள்ளான கார்த்திக் குமாருடன், பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் அமர்ந்திருக்கும் காட்சிப் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், கார்த்திக் குமார், ‘‘தன்னை யாரும் தாக்கவில்லை’’ என்றும், ‘‘வேண்டுமென்றே தன்னைத் தாக்குவது போன்ற காட்சிப் பதிவுகள் வெளியாகியுள்ளன’’ என்றும் கூறியிருந்தார்.
அது வெளிவந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, கார்த்திக் குமார், ‘‘தன்னை மிரட்டி அதுபோன்ற காட்சிப் பதிவை எடுத்தார்கள்’’ என்று ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் காயமடைந்த கார்த்திக்குமார், தற்போது மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவ மனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே ஒரு காட்சிப் பதிவை வெளியிட்ட கார்த்திக்குமார், “எனது மரணத்திற்கு பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே காரணம்” என்று பேசி யிருந்தார்.
குறைகளைத் தெரிவிக்க வந்த சொந்த தொகுதி மக்களிடம், அரசு பொறுப்பில் உள்ள பேரவை துணைத் தலைவர் ஒருவர், இது போன்று அடாவடியில் ஈடுபட்டுத் தாக்குதல் நடத்திய நிகழ்வு துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பையும். பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
குடிநீர்ப் பிரச்சினை குறித்துப் பேசியதால் ஆத்திரம்! கேள்வி எழுப்பியவரைத் தாக்கிய பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கர், பத்திரிகையாளரையும் தாக்கிய காட்சிப் பதிவு!
Leave a Comment
