ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்கள் இந்தியாவுக்கு வங்காளதேசம் மீண்டும் கோரிக்கை

2 Min Read
- Advertisement -

டாக்கா, நவ. 9- வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து மீண்டும் வங்காளதேசத்துக்கு அழைத்து வருவதற்காக அவரை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காளதேச அரசு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.வங்காளதேச சட்டத்துறை அமைச்சர் முகமது அசாதுஸ்ஸமான் இதுகுறித்து கூறியதாவது:-ஷேக் ஹசீனா எங்களது தீர்ப்பாயத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். அவர் ஒரு குற்றவாளி என்பதுதான் எங்களைப் பொறுத்தவரை அவரது அடையாளம்.

அவரை மீண்டும் வங்காளதேசத் துக்கு அழைத்து வருவதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்தியாவுடன் மேற் கொள்ளப்பட்டுள்ள நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவரை ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.இந்த விவகாரத்தில் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் சட்டப்படியான நடைமுறைகள் பின்பற்றப்படும். ஷேக் ஹசீனாவை ஒப்படைப்பது தொடர்பாக இந்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

வங்காளதேசத்தின் கோரிக் கையை இந்தியா ஏற்கெனவே பெற்றுக்கொண்டதாகவும், அது தொடர்பாக உரிய நடைமுறை களின்படி பரிசீலனை செய்யப் பட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், ஷேக் ஹசீனாவை ஒப்படைப்பது குறித்து இதுவரை இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை.

மரண தண்டனை

வங்காளதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்கியதில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாக ஷேக் ஹசீனா மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வங்காளதேச பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் ஒரு குற்றச்சாட்டுக்கு மரண தண்டனையும், மற்றொரு குற்றச்சாட்டுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த விசாரணை அவர் ஆஜராகா மலேயே நடைபெற்றது.

இதற்கிடையே, வருகிற டிசம்பர் மாதம் வங்காளதேசத்துக்கு திரும்பு வேன் என்று ஷேக் ஹசீனா அண் மையில் தெரிவித்திருந்தார். சிறை தண்டனை அல்லது மரணத்தை எதிர்கொள்ள நேரிட்டாலும் தாய்நாட்டுக்கு திரும்பும் முடிவில் மாற்றமில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், அவரை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்று வங்காளதேச அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *