கோடீஸ்வரர்கள், ரோபோக்களுக்கு வரி பில்கேட்ஸ் அதிரடி யோசனை

- Advertisement -

வாசிங்டன், நவ. 9- ஏஅய் தொழில்நுட்பத்தால் ஏழை, பணக்காரர் இடையேயான இடைவெளி மளமளவென அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க உலக கோடீஸ்வரர்களுக்கும், ரோபோக்களுக்கும் கூடுதல் வரி விதிக்க வேண்டும் என, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பில்கேட்ஸ் பேசியதாவது: ஏஅய் அபரிமிதமான செல்வத்தை வாரி இறைக்கத் துவங்கியுள்ளது. ஆனால், அந்தப் பெரும் பலன் ஏற்கெனவே கோடிகளில் புரளும் பெரு நிறுவனங்களுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே போய்ச் சேருகிறது. இதனால் சமூகத்தில் பொருளாதார சமத்துவ மின்மை எதிரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பணக்காரர்கள் தாங்களாக முன்வந்து செய்யும் அறக்கட்டளை உதவிகளும், தான தர்மங்களும் மட்டுமே இந்த இடைவெளியை ஒருபோதும் சரிசெய்துவிட முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது அரசின் தலையாய கடமை.

ரோபோக்களுக்கு வரி:

எனவே, அரசுகள் தங்கள் வரி விதிப்பு முறையை மாற்றி அமைக்க வேண்டும். குறிப்பாக, பெரும் கோடீஸ்வரர்களுக்கு வரியை கணிசமாக உயர்த்த வேண்டும்.

அதேபோல், மனித உழைப்பை புறந்தள்ளிவிட்டு அதற்குப் பதிலாக பணியமர்த்தப்படும் இயந்திரங்கள் மற்றும் ரோபோக்களுக்கும் வரி விதிக்க வேண்டும். மனிதர்களை வேலைக்கு எடுத்தால் வரி கட்டும் நிறுவனங்கள், ரோபோக்களை வாங்கும்போது அதை தொழில் செலவாகக் கணக்கு காட்டுகின்றன. ரோபோக்கள் மீது வரி விதித்தால் மட்டுமே மனிதர்களின் வேலை வாய்ப்பு பறிபோவது தற்காலிகமாக தடுக்கப்படும்; தொழிலாளர்களின் மறுபயிற்சிக்கு நிதி திரட்ட முடியும். இவ்வாறு பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், என்விடியா நிறுவன தலைவர் ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட சில முன்னணி தொழில் துறை தலைவர்கள் பில்கேட்ஸின் ‘ரோபோக்களுக்கு வரி’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *