செனகல் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி; பலரைத் தேடும் பணி தீவிரம்!

- Advertisement -

டக்கார்,  நவ.9 வடமேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலின் வடக்குக் கடலோரப் பகுதிக்கு அப்பால், அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக அய்ரோப்பாவை நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோரின் சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பரிதாபமாக பலியானதாக அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் மற்றும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், ஐரோப்பாவில் ஒரு சிறந்த எதிர்காலத்தைத் தேடி மேற்கொள்ளும் ஆபத்தான கடல் பயணங்களில் இது மேலும் ஒரு பேரிடராக மாறியுள்ளது.

செனகல் தலைநகர் டக்காருக்கும், வடக்கே உள்ள செயிண்ட்-லூயிஸ் நகருக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள கெபெமர் மாகாணத்தின் லூம்பூல் மணல் குன்றுகளுக்கு அருகில் சனிக்கிழமை இரவு இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும், செனகலின் முக்கிய புலம்பெயர்ந்தோர் உதவி சங்கமான ‘போசா ப்வே’ இந்த விபத்து வெள்ளிக்கிழமையன்றே நிகழ்ந் திருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்தில் இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒரே ஒரு நபர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் செனகல் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *