அதெல்லாம் ரகசியம், சொல்றதுக்கில்லை.. வாயைத் திறக்காத ஜோசப் விஜய் அரசு! ஆர்.டி.அய். கேள்விகளுக்குப் பதிலே இல்லையாம்!

- Advertisement -

சென்னை, நவ.9-  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு. முதலமைச்சர் ஜோசப் விஜய்  குறித்த கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிப்பதில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

சாமானிய மக்களும் அரசை கேள்வி கேட்கலாம், அரசின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக கொண்டுவரப்பட்டது தகவல் அறியும் உரிமை சட்டம். ஆர்டிஅய் என அழைக் கப்படும் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது.

அரசு மற்றும் பொதுத்துறை தொடர் பான தகவல்களை பெறுவதற்கு இந்திய குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் பத்து ரூபாய் மட்டுமே இதற்கு கட்டணம். ஒரு துறை தொடர்பாக நீங்கள் கேள்வி கேட்டு மனு அளித்தால் 30 நாள்களுக்குள் அது தொடர்பான துறையின் அதிகாரியும், பொது தகவல் அலுவலரும் பதில் அளிக்க வேண்டும்.

ஒரு வேளை அவர் மறுத்தால் மாநிலத் தகவல் ஆணையருக்கு விண்ணப் பிக்கலாம். அதே நேரத்தில் பொது தகவல் அலுவலர் உரிய பதில் அளிக்காவிட்டால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு. ஊழலற்ற, லஞ்சமற்ற வெளிப்படையான நிர்வாகம் வழங்கப்படும் என முதலமச்சர் ஜோசப் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறி இருந்தார்.

ஆனால், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படுவ தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள் ளது. குறிப்பாக அதிகாரிகள் மாற்றம், புதிய அறிவிப்புகள், திட்ட நிதி ஒதுக்கீடு, பல்வேறு புதிய பணியிட நியமனங்கள் தொடர்பாக உரிய அறிவிப்பும் வெளிப் படைத்தன்மையுடன் இல்லை என்று குற்றச்சாட்டப்படுகிறது.

குறிப்பாக முதலமைச்சர் விஜய் தொடர்பான கேள்விகளுக்குக் கூட தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த தகவல் அலுவலர்கள் பதில் அளிப்பதில்லை யாம். அண்மையில் பல்வேறு மாவட் டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் செல்லும் வழிகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

குறிப்பாக சேலம் பயணத்தின் போது 6 கோடி ரூபாய் செலவானதாக கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஆளும் தரப்பு மறுத்தது. அண்மையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டன் பயணம் சென்றபோதும் இதேபோல் தான் சர்ச்சை வெடித்தது. இதற்கு எவ்வளவு பணம் செலவானது? அரசுப் பணமா? அல்லது விஜயின் சொந்த செலவா? என தமிழ்நாடு அரசும் தெளிவுபடுத்தவில்லை.

இதை அடுத்து முதலமைச்சர், அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளின் பயணம் தொடர்பான வரவு செலவு விவரங்களை கேட்டு பலரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனு செய்து இருக்கின்றனர். அதில் முதலமைச்சர் விஜய் தொடர்பான கேள்விகளுக்கு பதில் தர முடியாது என தகவல் அறியும் சட்ட மனுக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மனித வள மேலாண்மை துறையும் அரசு ஊழியர்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லையாம். முதலமைச்சர் குறித்த எந்த விவரங்களையும் பகிரக் கூடாது என ‘ஒருவர்’ ஸ்ட்க்ரிக்ட் உத்தரவு போட்டதால் தான் இப்படி என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *