ராணிப்பேட்டையில் தண்ணீருடன் ரசாயனக் கழிவுநீர் கலப்பு அரிப்பு உள்பட பல்வேறு நோய்கள் வருவதாக பொதுமக்கள் அச்சம்!

- Advertisement -

ராணிப்பேட்டை, நவ.9- ராணிப் பேட்டை சிப்காட் குடியிருப்புப் பகுதியில் ரசாயன கழிவுநீர் தண்ணீருடன் கலந்து வந்ததால் குரோமியக் கழிவால் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் வடக்கு பகுதியில் எம்.பி.டி சாலை அமைந்துள்ள நிலையில் தெற்கு பகுதியில் சிப்காட் குடியிருப்பு மற்றும் எமரால்டு நகர் ஆகிய குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அண்மையில் பெய்த கனமழையால் ஓடும் மழைநீரில் அதிக அளவில் மஞ்சள் நிற ரசாயன கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நீரில் கால் வைத்தால் அரிப்பு மற்றும் புண்கள் ஏற்படுவதாகவும், அதேபோல் ரசாயனக் கழிவுநீரை குடித்த கன்றுக்குட்டி ஒன்று உயிரிழந்த தாகவும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் கடும் குற்றம்சாட்டை தெரிவித்ததோடு இந்த ரசாயனக் கழிவுநீர் டி.சி.சி தொழிற்சாலை வளாகத்திலுள்ள குரோமியக் கழிவுகளில் இருந்து கசிந்து வருகிறதா அல்லது வேறு தொழிற்சாலையில் இருந்து வெளியேறுகிறதா என்பது தெரியவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது டி.சி.சி வளாகத் திலுள்ள குரோமியக் கழிவுகளை பாது காப்பான தொட்டிகளில் அடைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மழையின் போது கழிவுநீர் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் ரசாயனக் கழிவுநீர் எங்கிருந்து வெளியேறுகிறது என்பதை உடனடியாக கண்டறிந்து, குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவதை தடுக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *