போதைப்பொருள் நடமாடும் சென்னை!

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 9- பெங்களூருவில் இருந்து குட்கா புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த இளைஞரை மயிலாப்பூரில் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 91 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களைப் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி, மாநகரம் முழுவதும் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக சென்னை முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மயிலாப்பூர் காவல் துறையினருக்குத் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நேற்று முன்தினம் (7.11.2026) காலை மயிலாப்பூர் கச்சேரி சாலை, கல்விவாரு வீதி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த இலகு ரக சரக்கு வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல், கூலிப் உள்ளிட்ட குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி. கண்டிகையைச் சேர்ந்த சிவா (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சுமார் 91 கிலோ எடையுள்ள குட்கா புகையிலைப் பாக்கெட்டுகளும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. காவல் துறையினரின் விசாரணையில், சிவா பெங்களூருவில் இருந்து குட்கா புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும், இவர் ஏற்கெனவே குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 2 குற்ற வழக்குகளில் தொடர் புடையவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சிவா, விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *