மேற்கு வங்க எஸ்.அய்.ஆர். தீர்ப்பாயத்திலிருந்து ஓய்வுபெற்ற மற்றொரு நீதிபதி பதவி விலகல்! பதவி விலகியோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது!

2 Min Read
- Advertisement -

கொல்கத்தா, நவ. 9- மேற்கு வங்க வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளின்போது வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களின் பெயர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட சிறப்புத் தீர்ப்பாயங்களில் இருந்து ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தொடர்ச்சியான பதவி விலகல்கள் அர சியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளன.

தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி விஸ்வஜீத் பாசு தற்போது தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக நம்பக மான வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இதன் மூலம், இந்தத் தீர்ப்பாயங்களின் தலைவர்களாக நியமிக்கப் பட்டவர்களில் பதவி விலகியவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

தொடர் பதவி விலகல்களின் பின்னணி

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத் தின் (எஸ்அய்ஆர்) போது, வாக்காளர் விவரங்களில் இருந்த பல்வேறு முரண்பாடுகள், பிழைகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டன.

இவ்வளவு பெருமள விலான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பின ரிடமிருந்து கடுமையான கண்டனங்களும், புகார் களும் எழுந்தன.

இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீக்கப்பட்ட வாக்காளர் களின் குறைகளைக் களையவும், அவர்களின் மேல்முறையீடுகளை விரைவாகவும், நியாய மாகவும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலுக்கு இணங்க, தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 19 எஸ்அய்ஆர் மேல்முறையீட்டுத் தீர்ப் பாயங்களை அமைத்தது.

இந்தத் தீர்ப்பாயங் களுக்குத் தலைவர்களாக பல்வேறு உயர் நீதிமன்றங் களைச் சேர்ந்த 19 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

எனினும், இந்தத் தீர்ப்பாயங்களின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக ரீதியான சூழல் காரணமாக தொடக்கத் திலிருந்தே நீதிபதிகள் மத்தியில் விலகல் போக்கு காணப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஏற்கெனவே கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ரஞ்சித் குமார் பாக், இந்திரஜித் ஆகியோர் தங்களது பதவிகளை விட்டு விலகினர்.

தற்போது இந்த வரிசையில் 4-ஆவதாக ஓய்வுபெற்ற நீதிபதி விஸ்வஜீத் பாசுவும் பதவி விலகியுள்ளனர்.

தீர்ப்பாயங்களின்
தற்போதைய நிலை

நீக்கப்பட்ட 91 லட்சம் வாக்காளர்களின் மேல்முறையீடு களை விசாரித்து நீதி வழங்கும் பொறுப்பு இந்தத் தீர்ப்பாயங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தொடர்ச்சி யாக அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் தனிப்பட்ட காரணங்களைக் கூறி விலகி வருவது, நிலுவையில் உள்ள மேல்முறை யீட்டு வழக்குகளின் மீதான விசாரணையை எந்தளவுக்குப் பாதிக்கும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இலட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை தொடர்பான இந்த விவகாரத்தில், தீர்ப்பாயங்களின் தலைவர் பதவிகள் அடுத்தடுத்து காலியாகி வருவது தேர்தல் ஆணையத்திற்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *