புதுடில்லி, ஜூலை 12 வகுப்புவாத உணர்வு களைத் தூண்டும் பிரதமர் மோடி, ராமன் கோவில் முறைகேட்டுக்கு ஏன் மவுனம் காக்கிறார்? என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், மேனாள் மாநிலங்களவை உறுப்பினரும், பேராசிரியருமான ராஜீவ் கவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறுகையில்,
“உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமன் கோவில் கட்டுமானப் பணிகளிலும் அதன் தொடக்க விழாவிற்குத் தலைமையேற்றும் பெருமை தேடிக்கொண்ட பிரதமர் மோடி, தற்போது எழுந்துள்ள ராமன் கோவில் அறக்கட்டளை நிதி முறை கேடு குற்றச்சாட்டுகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.
ராமன் கோவில் அறக்கட்டளையின் அனைத்துச் செயல்பாடுகள், நியமனங்கள் ஒன்றிய அரசால் செய்யப்பட்டன. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த நியமனங்களில் முக்கியப் பங்கு வகித்தார். அவர் உத்தரவின்படியே அறக்கட்டளை ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். நாட்டின் அதிக வருவாய்களையம், செலவீ னங்களையும் கொண்ட ராமன் கோவி லைக் கையாளும் அறக்கட்டளை, ஏன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டது? நேர்மையாகச் செயல்படுவதாக இருந்தால், ஏன் இச் சட்டத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும்? அறக்கட்டளையின் முக்கியப் பொறுப்பிலிருந்த சம்பத் ராய், அனில் மிஸ்ரா ஆகியோர் ஏன் திடீரென பதவி விலகினார்கள்? இவர்கள் நடந்த கொள்ளையை வேடிக்கை பார்த்துள்ளனர். விஷயம் கசிந்தவுடன் வெளியேறியுள்ளனர். ஊழல் அதிகாரி நிதி முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச, பாஜக அரசுப் சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவிற்குத் தலைமையேற்றுள்ள அதிகாரி மீதே மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த விசாரணைக் குழு சிறிய அளவிலான நபர்களை மட்டுமே குறி வைக்கிறது. சிறிய தொகை மட்டுமே முறை கேட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அப்படியென்றால் உண்மையான பெரும் பணம் எங்கே போனது? சம்பத் ராய், அனில் மிஸ்ரா ஆகியோர் மீது உடனடியாகக் காவல்துறையில் புகார் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். தனக்குச் சாதகமான விஷயங்கள் அல்லது வகுப்புவாத உணர்வு களைத் தூண்டும் விவகாரங்களில் பேசும் பிரதமர் மோடி, தற்போது ஏன் மவுனம் காக்கி றார்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
