அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் நிதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்

- Advertisement -

சென்னை, நவ.8 நாடு முழுவதும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் ஆராய்ச்சிகளை வெளியிடுவதிலும், அறிவுசார் சொத்துரிமைக்கான காப்புரிமைக்கு (Patents) விண்ணப்பம் செய்வதிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகளை நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது.

மாநிலங்களின் வளங்கள் மற்றும் ஆதாரங் களின் அடிப்படையில் கொள்கைகளை வகுப்பதற்கும், அவற்றின் செயல்திறனை வெளிப்படையாக ஒப்பிட்டு மதிப்பிடுவதற்கும் ஏதுவாக நிதி ஆயோக் இந்த சிறப்பு மதிப்பீட்டுப் பலகையை  உருவாக்கியுள்ளது.

மதிப்பீட்டின் முக்கியக் குறியீடுகள்: மாநிலங்களின் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கச் செயல்பாடுகளை பல்வேறு முக்கிய அளவு கோல்களின் அடிப்படையில் நிதி ஆயோக் விரிவாக மதிப்பீடு செய்துள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

lமாநிலத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்கள் கல்லூரிகளின் கல்வித் தரம் மற்றும் ஆய்வுக் கூடங்களின் வசதிகள்.

l ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உள் கட்டமைப்பு, நவீன தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் மேம்பாட்டு மய்யங்களின் கட்டமைப்பு.

l பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் இதழ்களில் வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை.

l புதிய கண்டுபிடிப்புகளுக்குக் கோரப் படும் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை.

lஅதிநவீன தொழில்நுட்பங்களை அடிப் படை யாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறு வனங்களின் வளர்ச்சி.

l புத்தாக்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் இன்குபேட்டர்களின் செயல்பாடு மற்றும் தொழில் துறையின் நேரடிப் பங்களிப்பு.

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள்

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2024-2025ஆம் ஆண்டுக்கான முதல் தரவுகளில் தமிழ்நாடு அனைத்து மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தரமான ஆய்வுகள் மூலம் மொத்தம் 44,611 ஆராய்ச்சி வெளியீடுகள் பதிவாகியுள்ளன. இது மற்ற மாநிலங்களை விட கணிசமான முன்னிலையாகும். இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள இதர மாநிலங்களின் நிலவரம்:

உத்தரப் பிரதேசம்: 29,298,  மகாராஷ்டிரம்: 28,947, கர்நாடகம்: 27,970, தில்லி: 24,417.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *