விமான எரிபொருள் மீதான வரி குறைப்பால் பயனடைவது யார்..? தவெக அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ.8 சமீபத் தில் விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (VAT) தவெக அரசு குறைத்தது. இந்நிலையில் விமான எரிபொருள் மீதான வரி குறைப்பால் பயனடைவது யார்? என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்:
விமானப் பயணங்களை மலி வானதாக்கும் நோக்கில், சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருள் (Aviation Turbine Fuel) மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், தமிழ்நாட்டின் பிற விமான நிலையங் களில் வெறும் 1 சதவீதமாகவும் தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது.
இருப்பினும், விழாக்கள் காலம் வரும் வேளையில், வழக்கமாக 4,000 முதல் 6,000 ரூபாய் வரை இருக்கும் விமானக் கட்டணங்கள், தற்போது 14,000 முதல் 15,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளன; சில வழித்தடங்களில் கட்டணம் 18,000 ரூபாயைக்கூட எட்டியுள்ளது.
1. எரிபொருள் செலவு குறைந்ததன் பலனை, விமானக் கட்டணங்களைக் குறைப்பதன் மூலம் பயணிகளுக்கு வழங்குவதாக விமான நிறுவனங்கள் உறுதி யளித்தனவா?
2. இந்த வரி குறைப்பால் மாநில அரசுக்கு ஆண்டு தோறும் எவ்வளவு வரி வரு வாய் இழப்பு ஏற்படும்?
3. விமானக் கட்டணங் களைக் குறைப்பது, புதிய வழித்தடங்களை உரு வாக்குவது அல்லது விமானச் சேவைகளின் எண் ணிக்கையை அதிகரிப்பது போன்ற ஏதேனும் குறிப்பிட்ட இலக் குகள் விமான நிறுவனங்களுக்கு நிர்ண யிக்கப்பட்டனவா?
4. பயணிகள் உண்மையில் என்ன பலன்களைப் பெற்றுள்ளனர்?
எரிபொருள் செலவைக் குறைப்பது விமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் என்பது உண்மைதான்; ஆனால், பொதுமக்களின் வரிப்பணம் செல விடப்படும்போது, அதன் பலன் பொது மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு எவ்வளவு வரி வருவாயைக் கைவிட்டுள்ளது? அதற்குப் பதிலாக, குறிப்பாக விமானக் கட்டணக் குறைப்பு போன்ற வகையில், மக்கள் என்ன பலனைப் பெற்றுள்ளனர்? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி உள்ளார் கனிமொழி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *