நூற்றாண்டு விழா நாயகர் ‘தாடி’ அருணாசலம் என்றும் வாழ்பவர்!

2 Min Read
- Advertisement -

செய்யாறு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், வாழ் நாள் முழுவதும் ஒரே தலைமை, ஒரே கொள்கை, ஒரே இயக்கம் என்பதில் இளமை தொட்டு வளமை வந்தகாலமாயினும், முதுமையடைந்த காலத்திலும் மாறாத மாபெரும் கொள்கை லட்சிய வீரர் மறைந்த  ‘தாடி அருணாசலம்’ என்ற பா.அருணாசலம் நமது கொள்கைக் குடும்பத்தின் ஒப்பற்ற உறவுக்காரருக்கு நவம்பர் 6ஆம் தேதி (நேற்று) நூற்றாண்டுத் தொடக்கம்! மகிழ்ந்து கொண்டாட வேண்டிய விழா!

உள்ளூரிலும் சரி, தமிழ்நாடு, புதுவை முதலிய பல மாநிலங்களிலும் கழகக் குடும்பத்தவருக்கு மட்டுமல்ல; கல்வியாளர்கள்,  தொழில் வல்லுநர்கள், பொது மனிதர்கள் என எல்லோராலும் மதிக்கப்பட்டு, இறுதிவரை மாறாத மானமிகு சுயமரியாதைக்காரராகவே இருந்தவர். அவருக்கு அருந்துணையாக, இல்லறத்தில் மட்டுமல்ல – இயக்கத் தொண்டறத்திலும் இறுதிவரை துணை நின்றவர் அவரது வாழ்விணையர்  சு. அமிர்தம் அம்மாள் (விருந்தோம்பலில் இருவரும் போட்டி யாளர்கள்).

ஒவ்வொரு பிறந்த நாளிலும் நமக்குப் பயணத் தொல்லை, சுமை இருக்கக் கூடாது என்ற பெரு உள்ளத்தோடு, உற்றார், உறவினர், நண்பர்களை பெரியார் திடலுக்கே (சென்னைக்கு) அழைத்து வந்து, நன்கொடைகளை இயக்கத்திற்குத் தந்து, சிறப்பு விருந்தினையும் ஏற்பாடு செய்துத் தந்து, மகிழ்ந்த தாராள சிந்தையுள்ள ஈகைச் செல்வர்.

அவர் மறைந்தாலும் அவரது அருமை மகன் செய்யாறு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு தோழர் அ. இளங்கோ  குடும்பத்தினர் அவர் ஏந்திய சுயமரியாதைச் சுடரை – தந்தை பெரியார் ஒளியை இன்று அம்மாவட்டத்தில் பாய்ச்சி கழகப் பணி செய்யும் அடலேறுகள்!

அதுபோல நூற்றாண்டு கண்ட முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு வேல். சோமசுந்தரம் அவர்களது செல்வ மகன் பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன், தோழர் சிற்றம்பலம் அவர்களது செல்வன் காமராஜ் ஆகியோர் தந்தையின் பணியை தகைவு குறையாது தொடருவதும் போற்றத் தகுந்ததாகும். வடமணப்பாக்கம் தோழர்கள் குறிப்பாக, நாணயம் குன்றா நல்ல செயல்வீரர் வி.வெங்கட்ராமன் போன்ற கழகச் செல்வங்கள் அந்த நூற்றாண்டு நாயகர்களின் பணி தொடருவதற்கு நமது மிகுந்த பாராட்டுகள்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

7.11.2026      

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *