‘ஓபிசி கிரீமிலேயர்’ இடஒதுக்கீட்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்கூட்டியே செயல்படுத்த முடியாது ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

- Advertisement -

புதுடில்லி, நவ. 7- இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) ‘கிரிமிலேயர்’ இடஒதுக்கீட்டுத் தகுதியைத் தீர்மானிப்பதில், பொதுத்துறை அல்லது தனியார் துறையில் பணிபுரியும் பெற்றோரின் வருமானம் அல்லது ஊதியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியாது என்று கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை முன்கூட்டியே அமல்படுத்த முடியாது என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது.

நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து அளித்த தீர்ப்பில் \”இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவதைத் தள்ளிவைப்பதற்கோ, முன்கூட்டியே அமல்படுத்தப்படுவதை மறுப்பதற்கோ எந்தவிதமான நம்பத்தகுந்த அல்லது நியாயமான காரணங்களும் இல்லை. கடந்த மார்ச் 11-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் உரிமைகளை உறுதி செய்கிறது.

அவர்கள் ஓபிசி பிரிவின் கீழ் ‘கிரிமிலேயர் அல்லாத’ தகுதியைப் பெற்றிருப்பதால், அவர்கள் பங்கேற்ற தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் பணி நியமனம் மற்றும் முன்னுரிமை இடஒதுக்கீடு பெற முழுத் தகுதியுடையவர்கள்,” எனத் தெரிவித்தது. மேலும், ‘‘இவர்களுக்கு வழங்கப்படும் இந்த உரிமையால், வேறு எந்த நபரின் பணி மூப்பிற்கும் பாதிப்பு ஏற்படாது; அதேபோல ஏற்ெகனவே முடிவுற்ற பணி நியமனங்களை மீண்டும் மறுபரிசீலனை வேண்டிய அவசியமும் இல்லை” என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

ஒன்றிய அரசு –- ரோஹித் நாதன்’ இடையிலான இந்த வழக்கில், பெற்றோரின் வருமானத்தை மட்டுமே ‘கிரிமிலேயர்’ தகுதிக்கான ஒரே அளவுகோலாகக் கருத முடியாது என்றும், அவர்களின் பதவியின் தகுதி நிலை, 1993-ஆம் ஆண்டின் அலுவலகக் குறிப்பாணை வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பில் வலியுறுத்தியிருந்தது.

இந்தத் தீர்ப்பை அமல்படுத்த ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட 6 மாத காலக்கெடு, தற்போது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு மற்றும் ‘கிரீமிலேயர்’ விதிமுறைகள் குறித்து அரசியலமைப்புச் சட்டம்,  நீதிமன்றத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டுப் புதிய கொள்கைகளை வகுக்க அரசுக்கு முழு உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ”இந்தத் தீர்ப்பை முன் கூட்டியே அமல்படுத்தினால், வழக்கில் தொடர்பில்லாத பல ஊழியர்களின் நியமனங்களில் தேவையில்லாத பாதிப்புகள், நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படும்” எனக் கூறி, இந்தத் தீர்ப்பை இனி வரும் காலங்களில் மட்டும் நடைமுறைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசு தனது மனுவில் கோரியிருந்தது. இந்தக் கோரிக்கையையே தற்போது உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இனி வரும் காலங்களில் மட்டுமே தீர்ப்பை நடைமுறைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசு கோரியது. இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *