சென்னை, நவ. 7- கோவை பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை அவசி யம் என்றும் திமுக வலியுறுத்தி யுள்ளது.
இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில், “கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம் பெற்றுள்ள சில நூல்கள் தவறான தகவல்களையும், பிழையான வரலாற்றையும் உள்ளடக்கியதாக இருப்பதையும், அந்தப் புத்தகங்களின் வெளி யீட்டாளர்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களின் பெயர் மற்றும் முகவரிகள் போலியாக இருப்பதையும் எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் வெளிச்சம் போட்டுக் காட்டி யிருந்தார். இதை தங்களது அரசியல் அருவெறுப்புக்கு பயன் படுத்தப் பார்க்கிறது தவெக.
எதற்கெடுத்தாலும் திமுகவைக் குற்றம் சொல்லியே பழக்கப்பட்ட தவெக அரசைச் சேர்ந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திமுக மீது புழுதி வாரி இறைப்பதற்கென்றே செயல்படும் அக்கட்சியின் ‘வெர்ச்சுவல் அப்யூஸர்ஸ்’ கூட்டமும், வழக்கம்போல் பழியைத் தூக்கி திமுக மீது போட்டுவிடலாம் என்று செயல் பட்டனர்.
இதில் ‘அதிர்ச்சியான ஆச்சர்யம்’ என்ன என்றால், இதுவரை சட்டம் – ஒழுங்கு, விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட எந்தப் பிரச்சி னைக்கும் வாய்த்திறக்காத முதலமைச்சரும் அதிசயமாய் அறிக்கை வெளியிட்டுள்ளார், மக்களைத் திசைத் திருப்ப இது பயன்படும் என்ற நப்பாசையால்!
முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, நொடிப்பொழுதில் அரசின் அத்தனை ஆவணங்களையும் ஆய்வு செய்யும் அதிகாரத்தையும் கொண்டுள்ள விஜய், பெரியார் அறிவுலகப் புத்தகங்கள் வாங் கியது தொடர்பான சர்ச்சை வெளியானதும், அது குறித்து முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும். அதை அவர் பொறுப்புடன் செய்ததாகத் தெரியவில்லை.
நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்கள் தரமானவையாக இருக்க வேண்டும். அவற்றில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என ‘வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கை’யை முதலில் உருவாக்கியதே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை மறைத்து விட்டு தவெகவினர் பரப்புவது அவதூறு மட்டுமே.
கோவையில் அமையவுள்ள மாபெரும் நூலகத்தில் தரமான நூல்கள் இடபெற வேண்டும் என மதிப்புமிக்க எழுத்தாளர்களையும், கல்வியாளர்களையும் உள்ளடக்கிய நூல் பரிந்துரைக் குழுவினை கடந்த திமுக ஆட்சியில் அமைத்தோம். புத்தக முறைகேட்டை வெளிகொண்டுவந்த கட்டு ரையை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனே, அந்த நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்தான்.
தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான நூலகங்களை உருவாக்கி, இந்திய ஒன்றியமே வியந்து பார்க்கும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட நூலகங்களை அமைத்த திமுகவின் திட்டங்களில் இதற்குமுன் இப்படிப்பட்ட குறைகள் ஏதாவது எழுந்துள்ளனவா?
ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுகவின் திட்டங்களைச் சிதைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தவெக ஆட்சியில் இத்தகைய செய்தி வந்திருப்பதால், இதில் உள்நோக்கம் ஏதும் உள்ளதோ, சதிச் செயல்கள் ஏதும் உள்ளனவோ என்று கருத வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட புத்தகங்கள், அதனை எழுதிய எழுத்தாளர்கள், அனுமதி பெற்ற பதிப்பகங்கள் ஆகியவற்றின் பின்னணி வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.
எனவே, வழக்கம் போல் திமுக, திமுக என்று சொல்லாமல், சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை அவசியம் என்பதே திமுகவின் நிலைப்பாடு” என்று அவர் கூறியுள்ளார்.
