6.11.2026 அன்று திருச்சி மாவட்ட திராவிடர் கழக ஒத்துழைப்புடன் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பாக தமிழர்களின் பண்டிகையா தீபாவளி? தீபாவளி குறித்து பெரியார் கேட்ட கேள்விகள், தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது), தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு அறிவியல் பூர்வமான கேள்விகள்? போன்ற தலைப்பிலான துண்டறிக்கை பொதுமக்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதில் திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ஆ.அறிவுச்சுடர், பெரியார் புத்தக நிலைய சாந்தகுமார், அருண், ரகுராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
