சென்னை, நவ. 7- சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ள இடத்துக்கு மீனவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை ஒருங்கிணைப் பாளர்கள் கு.பாரதி, ஜி.ஆர்.விஜயன் ஆகியோர் கூறியதாவது:-
புதிய தலைமைச் செயலகம் அமைப்பதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரப் பகுதியான பட்டினப்பாக்கத்தில் அமைப்பதற்குத் தான் எதிர்ப்பு. இந்த இடம் மீனவர்களுக்குச் சொந்தமானது. இங்கு கட்டடம் அமைக்க அடிப்படை சாத்தியக்கூறு ஆய்வோ, விரிவான திட்ட அறிக் கையோ தயாரிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித முன் ஆய்வும் இன்றி இடத்தைத் தேர்வு செய்தது எப்படி?.. முதலமைச்சர் ஜோசப் விஜய் இத்திட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கவேண்டும்.
தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இல்லையெனில், மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க உயிரே போனாலும் போராட் டத்தில் ஈடுபட்டு திட்டத்தைத் தடுப்போம்.
இவ்வாறு அவர்கள் எச்சரித்தனர்.
