பத்தமடை, நவ. 7- எல்-நினோவின் தாக்கத்தால் உலகப் புகழ் பெற்ற பத்தமடை பாய் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியா ளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
300 ஆண்டுகள் பழமையான இந்த பத்தமடைப் பாய், ஒன்றிய அரசின் புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது. நெல்லையில் இருந்து சுமார் 29 கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பத்தமடையில் ஆரம்பத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பத்தமடைப் பாய் செய்வதை வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர்.
ஆனால் கடுமையான விலைவாசி உயர்வு, தொழிலாளர் பிரச்சினை உள்பட பல்வேறு காரணங்களால் பத்தமடையில் பாய் தொழில் தற்போது நலிவடைந்துள்ளது. 300 குடும்பத்தினர் இருந்த இடத்தில், தற்போது 50-க்கும் குறைவான குடும்பத்தினர் மட்டுமே பாய் நெசவு செய்வதாக கூறுகிறார்கள்.
அதிலும், கைத்தறி நெசவு செய்ப வர்கள் 10-க்கும் குறைவானவர்களே உள்ளனர். பெரும்பாலும் தற்போது விசைத்தறி தான் ஓடுகிறது. தமிழ் நாட்டில் திருச்சி, கரூர், சீர்காழி, கொள்ளிடம், தஞ்சாவூர் உள்ளிட்ட பிற இடங்களிலும் கோரைப்பாய்கள் நெய்யப்பட்டு வந்தாலும், பத்தமடைப் பாய் தான் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. பிற மாவட்டங்களில் பாய் நெய்வதற்கான கோரைப்புற்களை தோட்டத்தில் பயிரிட்டு உற்பத்தி செய்கின்றனர்.
ஆனால், பத்தமடையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இயற் கையாகவே வளரும் கோரைப்புற்கள் கொண்டு பாய் நெய்வதால் அந்த பாய் உடலுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் வராமல் தடுப்பதாக நம்பப்படுகிறது. பெரும்பாலும் பாய் நெய்யும் தொழிலில் ஆண்களைவிட பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர்.
சமீபகாலமாக தாமிரபரணி நதியில் சோலைக் காடுகள் அழிக்கப்பட்டதால் கோரைப்புற்கள் அதிக அளவு கிடைப்பதில்லை. இதனால் பத்தமடை நெசவாளர்கள் தஞ்சாவூர் மாவட்டம் காவிரிப் படுகையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் கோரைப் புற்களை வாங்கி பாய் நெசவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் தற்போது, எல் நினோ வால் ஏற்பட்டுள்ள வறட்சியால் மூலப்பொருட்களின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கோரைப்புல் விலை 65 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சாயம், நூலின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே பத்தமடை பாயின் விலையை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தி யாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விலைவாசி உயர்வால், பாய் நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உற்பத்தியாளர் சுலைமான் கூறுகையில், “நான் இந்த தொழிலில் 5ஆம் தலைமுறையாக இருக்கிறேன். சமீபகாலமாக மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. கோரைப் புல், சாயப்பொடி, நூல் போன்றவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
எனவே அரசு நலவாரியம் மூலம் எங்களுக்கு ஊக்கத்தொகை அளித்து, தொழில் மேம்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விலை வாசியை கட்டுப்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும் என்றார். பத்தமடை, நவ. 7- எல்-நினோவின் தாக்கத்தால் உலகப் புகழ் பெற்ற பத்தமடை பாய் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியா ளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
300 ஆண்டுகள் பழமையான இந்த பத்தமடைப் பாய், ஒன்றிய அரசின் புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது. நெல்லையில் இருந்து சுமார் 29 கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பத்தமடையில் ஆரம்பத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பத்தமடைப் பாய் செய்வதை வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர்.
ஆனால் கடுமையான விலைவாசி உயர்வு, தொழிலாளர் பிரச்சினை உள்பட பல்வேறு காரணங்களால் பத்தமடையில் பாய் தொழில் தற்போது நலிவடைந்துள்ளது. 300 குடும்பத்தினர் இருந்த இடத்தில், தற்போது 50-க்கும் குறைவான குடும்பத்தினர் மட்டுமே பாய் நெசவு செய்வதாக கூறுகிறார்கள்.
அதிலும், கைத்தறி நெசவு செய்ப வர்கள் 10-க்கும் குறைவானவர்களே உள்ளனர். பெரும்பாலும் தற்போது விசைத்தறி தான் ஓடுகிறது. தமிழ் நாட்டில் திருச்சி, கரூர், சீர்காழி, கொள்ளிடம், தஞ்சாவூர் உள்ளிட்ட பிற இடங்களிலும் கோரைப்பாய்கள் நெய்யப்பட்டு வந்தாலும், பத்தமடைப் பாய் தான் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. பிற மாவட்டங்களில் பாய் நெய்வதற்கான கோரைப்புற்களை தோட்டத்தில் பயிரிட்டு உற்பத்தி செய்கின்றனர்.
ஆனால், பத்தமடையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இயற் கையாகவே வளரும் கோரைப்புற்கள் கொண்டு பாய் நெய்வதால் அந்த பாய் உடலுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் வராமல் தடுப்பதாக நம்பப்படுகிறது. பெரும்பாலும் பாய் நெய்யும் தொழிலில் ஆண்களைவிட பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர்.
சமீபகாலமாக தாமிரபரணி நதியில் சோலைக் காடுகள் அழிக்கப்பட்டதால் கோரைப்புற்கள் அதிக அளவு கிடைப்பதில்லை. இதனால் பத்தமடை நெசவாளர்கள் தஞ்சாவூர் மாவட்டம் காவிரிப் படுகையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் கோரைப் புற்களை வாங்கி பாய் நெசவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் தற்போது, எல் நினோ வால் ஏற்பட்டுள்ள வறட்சியால் மூலப்பொருட்களின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கோரைப்புல் விலை 65 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சாயம், நூலின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே பத்தமடை பாயின் விலையை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தி யாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விலைவாசி உயர்வால், பாய் நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உற்பத்தியாளர் சுலைமான் கூறுகையில், “நான் இந்த தொழிலில் 5ஆம் தலைமுறையாக இருக்கிறேன். சமீபகாலமாக மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. கோரைப் புல், சாயப்பொடி, நூல் போன்றவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
எனவே அரசு நலவாரியம் மூலம் எங்களுக்கு ஊக்கத்தொகை அளித்து, தொழில் மேம்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விலை வாசியை கட்டுப்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும் என்றார்.
