ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்கவே மக்கள் அலைய வேண்டுமா? பெ.சண்முகம் காட்டம்

- Advertisement -

சென்னை, நவ. 6- ‘வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அரசிடம் இருந்து எந்த உதவிகளையும் பெற முடியாது என்பதா?’ என ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘முன்னொரு காலத்தில் அனைத்துக்கும் ரேசன் அட்டையே அடிப்படை என்றார்கள். பிறகு அனைத்துக்கும் ஆதாரம் “ஆதார்” என்றார்கள். இப்போது, வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அரசிடம் இருந்து எந்த உதவிகளையும் பெற முடியாது என்கிறார்கள்.

அரசிடம் இருந்து உதவிகளை எதிர்பார்த்து இருப்பவர்கள் ஏழைகளே. எனவே, இது ஏழைகள் மீதான ஒன்றிய பாஜக அரசின் மற்றொரு கொடூரமான தாக்குதல். முதலாளிகளிடம் முகவரி கூட கேட்காத ஆட்சியாளர்கள் ஏழைகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, இப்போது வாக்காளர் அடையாள அட்டை கேட்கிறார்கள். ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்கவே மக்கள் அலைய வேண்டுமா மோடி அவர்களே?’ எனத் தெரிவித்துள்ளார்.

எஸ்.அய்.ஆர் படிவம் ஆறு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பின்வாங்கியது ஏன்?

எஸ்டிபிஅய் கட்சி கேள்வி

சென்னை, நவ. 6- எஸ்டிபிஅய் கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகமது ஷஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: எஸ்அய்ஆர் நடவடிக்கையின்போது படிவம்-6 உள்ளிட்டவற்றில் பல்வேறு நிபந்தனைகள் கட்டாயமாக்கப்பட்டன.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் தனது முந்தைய முடிவில் இருந்து பின்வாங்கியது சந்தேகங்களை எழுப்புகிறது. எஸ்அய்ஆர் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட பல மாநிலங்களில், கோடிக்கணக்கானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அந்த மாநிலங்களில் ஆட்சி மாற்றங்களும் நிகழ்ந்த பின்னர் தற்போது தேர்தல் ஆணையம் தனது முடிவை திரும்பப் பெறுவது, குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவது போன்றது. மேலும், உச்ச நீதிமன்றமும் இத்தகைய கட்டாயங்களை அங்கீகரிக்காத நிலையில், இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு துணைபோனவர்கள் யார் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *