குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.8ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

- Advertisement -

சென்னை, நவ.6- குரூப்-4 தேர்வுக்கு விண்ணப் பிக்கும் அவகாசம் நவம் பர் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித் தண்டலர் உள்பட பல்வேறு பதவிகளில் 6,574 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி வெளியிட்டது.

இணையவழி விண்ணப்பப் பதிவும் அன்றைய நாளே தொடங்கியது. இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண் ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நவ.5 அன்று நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப் பினரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசத்தை நவம்பர் 8ஆம் தேதி வரை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.

எனவே, குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிஎன் பிஎஸ்சி இணையதளம் (www.tnpsc.gov.in) வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரூப்-4 எழுத்துத்தேர்வு 2027 ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *