ஏமன் சென்ற படகு கவிழ்ந்ததில் 109 அகதிகள் உயிரிழப்பு காணாமல் போன 116 பேரை தேடும் பணி தீவிரம்

1 Min Read

ஜிபூட்டி, அக். 12- ஏமன் நாட்டை நோக்கிச் சென்ற அகதிகள் படகு ஜிபூட்டி கடற்கரை அருகே கவிழ்ந்த விபத்தில், 15 குழந்தைகள் உட்பட 109 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 116 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அனைத்து பன்னாட்டு அகதிகள் அமைப்பான அய்ஓஎம் நேற்று தெரிவித்துள்ளது.

சுமார் 350 பேருடன் சென்ற அந்தப் படகு அக்டோபர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிபூட்டி நாட்டின் துறைமுக நகரான ஒபோக்கிற்கு வடக்கே உள்ள குஹெரே பகுதிக்கு அருகில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 80 பேருக்கும் அதிகமானோர் உயிர் பிழைத்துள்ளனர். உயிர் பிழைத்த அனைவரும் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

எத்தியோப்பிய அரசுத் தரப்பிலிருந்தும் தகவல் வெளியிடப்படவில்லை. ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே ஆபத்தான கடல் வழிகளில் அகதிகள் பயணம் செய்யும்போது இதுபோன்ற கோர விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *